பதிவழிப்பு (கணக்கியல்)

பதிவழிப்பு (Write-off) என்பது கணக்கியலில் பயன்படுத்தப்படும் ஒர் சொல்லாகும். காப்புறுதி நிறுவனங்களில், வங்கிகளில், வணிக நிறுவனங்களில் கணக்கேட்டில் உள்ள ஒர் தரவினை நீக்குவதனை இது குறித்து நிற்கும்.

கடன்பட்டோர், நன்மதிப்பு, தொடக்கச்செலவு என்பன நிறுவனத்தின் கொள்கைக்கு அமைவாக பதிவழிக்கப்படும். இப்பதிவழித்த தொகை வருமான கூற்றில் நட்டமாக/செலவாக காட்டப்படும்.

கடன்பட்டோர் சிலரிடமிருந்து பணம் அறவிடமுடியாது என உறுதியாக தெரியவரும் பொழுது அத்தொகையினை குறிப்பிட்ட நபரின் கணக்கிலிருந்து பதிவழிப்பு செய்யப்படும். இத்தொகை அறவிடமுடியாக்கடன் ஆக வருமான கூற்றில் காட்டப்படும். அதாவது, ஓர் வியாபார நட்டமாக காட்டப்படும்.

இதே போல் அருவ சொத்தான நன்மதிப்பும் சில வேளைகளில் நிறுவன தீர்மானித்த வீதத்திற்கேற்ப குறிப்பிட்ட தொகை பதிவழிக்கப்படும். அவ் பதிவழிக்கப்பட்ட தொகை நிதிக்கிரயமாக வருமான கூற்றில் காட்டப்படும். எஞ்சிய நன்மதிப்பு தொகை ஐந்தொகையில் சொத்தாக காட்டப்படும்.

தொடக்கச் செலவு எனும் பங்கு வழங்கலால் ஏற்படும் செலவானது அவ் வருடத்திலே முழுமையாக பதிவழிக்கப்படும்.இத்தொகையில் குறிப்பிட்ட வீதம் நட்டமாக எடுத்து வருமான கூற்றில் நிதிக்கிரயம் பகுப்பில் காட்டப்படும் எஞ்சிய தொகை ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தினை பயன்படுத்தி முழுமையாக கழிக்கப்படும்.

குறிப்பு 2007 இலங்கையில் நடைமுறையில் உள்ள கணக்கீட்டு நியமத்திற்கு ஏற்ப கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. பதிவழிப்பு கொள்கை நாட்டுக்கு நாடு மாறுபடும்.

பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவழிப்பு_(கணக்கியல்)&oldid=3346402" இலிருந்து மீள்விக்கப்பட்டது