வருமானக் கூற்று

(வருமான கூற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வருமானக் கூற்று (Income statement) அல்லது இலாப நட்ட கணக்கு (Profit and Loss Statement) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட தேறிய இலாபத்தினை அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வணிகநிறுவனம் வணிக நடவடிக்கையில் பெற்ற வருமானம் கூற்றின் மேல் பாகத்திலும் செய்த செலவீனம் கூற்றின் கீழ் பாகத்திலும் குறிக்கப்பட்டிருக்கும்.

வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் நிதியாண்டின் முடிவில் கட்டாயமாக சமர்பிக்கப்பட வேண்டிய நிதிகூற்றுகளில் வருமானக் கூற்றும் அடங்கும்.(மற்றையவை ஐந்தொகை,காசுபாய்ச்சல் கூற்று,உரிமை மாற்றல் கூற்று)

வருமானக் கூற்றின் வடிவங்கள் அவற்றின் தேவைக்கேற்வும் (உள்ளக மற்றும் பிரசுரிமை) வேறுபட்ட நாடுகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு நியமங்களுக்கு() ஏற்பவும் இவை சிறுது வடிவம் மாறுபடக்கூடும்.

வரையறை

தொகு

வருமானக் கூற்றானது முதலீட்டாளர் மற்றும் கடன்கொடுப்போர் என்பவர்கள் நிறுவனதின் கடந்தகால செயற்திறனை அறிந்து கொள்ள உதவுவதுடன் வருங்காலதில் நிறுவனம் தொடர்ந்து இயங்குமா என்பதை துணியவும் பயப்படுகின்றது.

எனினும் வருமானக் கூற்றில் சில வரையரையும் உண்டு:

  • சில தொகைகள் கணக்கீட்டு முறைகளில் தங்கி உள்ளது எ-கா, தொக்கு கணக்கெடுக்கும் முறை இது LIFO மற்றும் FIFO எனும் இரண்டு வகைப்படும் இரண்டு முறைகளிலும் ஒரே விடை பெறப்படாது.
  • சில நட்டங்கள் அனுமானத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எ-கா சொத்துக்களுக்கு தேய்மானம்(depreciation) எவ்வளவு என தீர்மானித்தல்
  • சில நட்டங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் எனும் எதிர்வுகூறலின் அடிப்படையில் எடுக்கப்படல் எ-கா ஐயகடன் எவ்வளவு என கணக்கிடல்
  • சில இலாபங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாகக் கிடைக்கும் என தெரிந்தாலும் அவற்றினை இங்குக் காட்டமுடியாது.

வருமானக் கூற்றின் உருப்படிகள்

தொகு

வருமானகூற்று மாதிரி:

  தேறிய விற்பனை _______________3,400,000
  வாடகை வருமானம் ____________   40,000
  வட்டி வருமானம்        __________ 12,000
     மொத்த வருமானம்   _________ 3,452,000
  
  (கழிக்க)
  விற்பனைக் கிரயம்  ______________ 2,000,000
  நிர்வாகச் செலவுகள்     __________  450,000
  விற்பனை செலவுகள் ______________ 350,000
  நிதிகிரயம்         ________________  45,000
     மொத்த செலவுகள்    _________ 2,845,000

  வரிக்கு முந்திய வருமானம் ________ 607,000
  வருமான வரி        _____________  (182,100)
  தேறிய வருமானம் _______________   424,900

பங்கொன்றின் உழைப்பு _____________   4.20
வழங்கிய பங்கு 100 000

பிரசுரிமை வடிவமாதிரி

தொகு

உள்ளகதேவை வடிவமாதிரி

தொகு

குறிப்பு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Income Statement எடுத்துக்காட்டுகளுடன் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருமானக்_கூற்று&oldid=1644850" இலிருந்து மீள்விக்கப்பட்டது