பதே சாகர் ஏரி

பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் அமைந்துள்ளது. 1680 களில் பிகோலா ஏரிக்கு வடக்கே, உதய்பூரின் வடமேற்கில் கட்டப்பட்டது. மேவார் மற்றும் உதயப்பூர் மகாராணாவாக இருந்த பதே சிங்கின் பெயரிடப்பட்ட இது ஒரு செயற்கை ஏரியாகும். உதயப்பூரின் நான்கு ஏரிகளில் இதுவும் ஒன்று. பிகோலா ஏரி, உதய் சாகர் ஏரி, தேபார் ஏரி அல்லது ஜெய்சமந்த் ஏரி ஆகியவை மற்ற மூன்று ஏரிகளாகும்.[1][2]

பதே சாகர் ஏரி
Fateh Sagar Lake
ஏரியின் ஒரு மாலை காட்சி
அமைவிடம்உதயப்பூர், இராசத்தான்
ஆள்கூறுகள்24°36′N 73°40′E / 24.6°N 73.67°E / 24.6; 73.67
வகைநீர்த்தேக்கம், நன்னீர், பல்வெப்ப அடுக்கு ஏரி
வடிநிலப் பரப்பு54 km2 (21 sq mi)
வடிநில நாடுகள்India
அதிகபட்ச நீளம்2.4 km (1.5 mi)
அதிகபட்ச அகலம்1.6 km (0.99 mi)
மேற்பரப்பளவு4 km2 (1.5 sq mi)
சராசரி ஆழம்5.4 m (18 அடி)
அதிகபட்ச ஆழம்13.4 m (44 அடி)
நீர்க் கனவளவு2.1×10^6 m3 (74×10^6 cu ft)
கரை நீளம்18.5 km (5.3 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்578 m (1,896 அடி)
Islands3
குடியேற்றங்கள்உதயப்பூர்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

பதே சாகர் ஏரியின் எல்லைக்குள், மூன்று சிறிய தீவுகளும் உள்ளன; இவற்றில் மிகப் பெரியது நேரு பூங்கா (4 km2 (1.5 sq mi) பரப்பளவு); இது ஒரு முக்கியமானச் சுற்றுலாத் தலமாகும். இரண்டாம் தீவு (0.06 km2 or 15 ஏக்கர்கள் பரப்பளவு) நீருற்றுடன் கூடிய ஒரு பொதுப் பூங்காவைக் கொண்டுள்ளது. மூன்றாவது தீவில் (1.2 km2 பரப்பளவு) (1.2 கிமீ 2 பரப்பளவு) உதயப்பூர் சூரிய வான் ஆய்வகம் உள்ளது. நேரு பூங்காவிற்கு உள்முக மோட்டார் படகுகள் மூலம் அணுகலாம். ஏரியின் நீர் நீளமும், பசுமையான மலைகளின் பின்னணியும் 'இரண்டாவது காஷ்மீர்' என்ற பெயரை உதயப்பூருக்குப் வழங்கியுள்ளது. [1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Lakes". Archived from the original on 27 March 2013.
  2. "Udaipur Lakes, Lakes Udaipur, Lakes Of Udaipur, Pichhola lake, Fatahsagar Lake, Udaisagar Lake, Lake Pichola, Badi Lake, Rajsamand Lake பரணிடப்பட்டது 6 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம்". www.amazingudaipur.com.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதே_சாகர்_ஏரி&oldid=3760216" இலிருந்து மீள்விக்கப்பட்டது