பதே சிங் (தில்லி அரசியல்வாதி)
பதே சிங் (Fateh Singh) இந்தியாவின் தில்லி நகரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சௌத்ரி பதே சிங் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். தில்லியின் கோகல்பூர் சட்டமன்றத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] முன்னதாக இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். தில்லியின் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார் 1995 ஆம் ஆண்டு முதல் 1998 அம் ஆண்டு வரை அதன் துணை சபாநாயகராக பணியாற்றினார்.
பதே சிங் Fateh Singh | |
---|---|
தில்லி சட்டமன்றம், உறுப்பி | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | இரஞ்சித் சிங் காசியப்பு |
பின்னவர் | சுரேந்திர குமார் |
தொகுதி | கோகல்புர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சனவரி 1957 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | நந்து நகரி, தில்லி |
வேலை | வர்த்தகம்&அரசியல் |
தனிப்பட்ட வழ்க்கை
தொகுபதே சிங் தொழிலால் ஒரு வியாபாரி.[2]தந்தையின் பெயர் சக்தூ சிங் என்பதாகும். உத்தரபிரதேசத்தின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். ஒர் இல்லத்தரசியை திருமணம் செய்து கொண்டார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுபதே சிங் 1993 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி சார்பாக பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட நந்துநகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 13,429 வாக்குகள் பெற்றார் மற்றும் 781 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் ரூப் சந்தை தோற்கடித்தார்.[4] தில்லியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானார். 1995 முதல் 1998 வரை துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகராக விதிகள் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.[5]
பதே சிங் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் கோகல்பூரில் (சட்டமன்றத் தொகுதி) இருந்து போட்டியிட்டார். 10,262 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். பகுசன் சமாச் கட்சியின் சுரேந்திர குமார் வெற்றி பெற்ற நிலையில், பாசகவின் ரஞ்சீத் சிங் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[6][7] பதே சிங் 2014 திசம்பரில் பாசகவிலிருந்து விலகி அம் ஆத்மி கட்சிக்கு மூன்று பாசக தலைவர்களுடன் சேர்ந்தார். சாக்தராவில் நடந்த ஆம் ஆத்மி பேரணியில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[8] 2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் கோகல்பூரில் இருந்து போட்டியிட்டு 71,240 வாக்குகள் பெற்றார். பாசகாவின் பதவியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சீத் சிங்கை 31,968 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: 17 February 2015.
- ↑ 2.0 2.1 "Gokulpur Results". NDTV இம் மூலத்தில் இருந்து 17 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217121102/http://www.ndtv.com/elections/delhi/gokalpur-mla-results. பார்த்த நாள்: 17 February 2015.
- ↑ "Fateh Singh Affidavit" (PDF). myneta.info/. Archived from the original (PDF) on 17 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Delhi Assembly Election Results 1993
- ↑ Delhi Legislative Assembly
- ↑ "AAP's Fateh Singh says he left BJP because he wanted to work for the common man". I am in DNA of North East Delhi. 14 January 2015. Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 2008 Election Commission of India
- ↑ "Ex-BJP MLA joins AAP". The Times of India. 17 December 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
- ↑ "Election Result". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 15 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Assembly Elections 2015 Results, Election Commission of India". Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.