பத்தாம் இராம வர்மா
பத்தாம் இராம வர்மா (Rama Varma X) (இறப்பு: 1809 சனவரி) இவர் 1805 முதல் 1809 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார். [1]
பத்தாம் இராம வர்மா | |
---|---|
மகாராசா | |
கொச்சியின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 26 செப்டம்பர் 1805— சனவரி 1809 |
முன்னையவர் | சக்தன் தம்புரான் |
பின்னையவர் | மூன்றாம் கேரள வர்மா |
இறப்பு | சனவரி 1809 வெள்ளரப்பள்ளி அரண்மனை, புத்தியேட்டம், காலடி, கேரளா, இந்தியா |
மரபு | கொச்சி அரச குடும்பம் |
மதம் | இந்து சமயம் |
குடும்பம்
தொகுஇவர், சக்தன் தம்புரானின் தாயின் தங்கையின் மகனாவார். (பிரபலமாக சித்தம்மா தம்புரான் என்று அழைக்கப்பட்டார்). 1805 இல் சக்தன் தம்புரான் இறந்த பின்னர் பின்பதவிக்கு வந்தார்.[2]
ஆட்சி
தொகுஇவர் பொதுவாக ஒரு தாராள மனப்பான்மை உடையவர். திறமையற்ற மன்னர் என்று நினைவுகூரப்படுகிறார். இவர், ஒரு சிறந்த எழுத்தாளராவார். மேலும் சுந்தரகாண்ட புராணத்தை மலையாளத்தில் எழுதினார்.
இறப்பு
தொகுஇவர் 1809 சனவரியில் வெள்ளரப்பள்ளி அரண்மனையில் இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "List of rulers of Kochin". worldstatesmen.org.
- ↑ History of Cochin (PDF). corporationofcochin. p. 9. Archived from the original (PDF) on 29 திசம்பர் 2009.