பத்து கன்னியர் உவமை
பத்து கன்னியர் உவமை இயேசு கூறிய உவமையாகும். இதில் இயேசு தன்னை மணவாளனாகவும் கிறிஸ்தவரை கன்னிகையாராகவும், பரலோக இராச்சியத்தை கல்யாண வீடாகவும் உவமானப்படுத்துகிறார். மத்தேயு 25:1-12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உவமை
தொகுபரலோக இராச்சியம் தங்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தி இல்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் விளக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளோடு தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுஇரவில்: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் கேட்டது. அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் சென்றபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு கூடக் கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு மணவாளன்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கருத்து
தொகுஇது இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும். அவர் வரும் போது அவரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது பிரதான கருத்தாகும். இங்கு மணவாளன் இயேசுவாகும் கல்யாணவீடு பரலோக இராச்சியமாகும். மேலும் விளக்கு மனிதரது ஆத்துமாவையும் எண்ணெய் தயார் நிலையையும் குறிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- தமிழ் விவிலியம் மத்தேயு 25
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம் புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்