பத்தூமி

பத்தூமி (Batumi, சியோர்சியன்: ბათუმი) கருங்கடலில், தென்மேற்கு சியார்சியாவில் அமைந்துள்ள 154,100 சனத்தொகையைக் கொண்ட, குறிப்பிடத்தக்க ஒரு துறைமுகநகரம் ஆகும். இது சியோர்சியாவின் மூன்றாவது பெரிய நகரம். தன்னாட்சிக் குடியரசான அட்சாரியாவின் தலைநகர். இது1870 இல் கம்பளி, பருத்தி, மரம், பட்டுக்கூடு, மங்கன் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுக நகரமாக இருந்தது.[3] தற்சமயம் உயர்தர கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ள அறிவியல் சார்ந்த இடமாகவும் உள்ளது.[4] கோடைகாலங்களில் இது உல்லாசப்பிரயாணிகள் கூடும் பிரபல்யமான தளமாகவும் உள்ளது.

பத்தூமி
Batumi

ბათუმი
பத்தூமி
பத்தூமி
பத்தூமி Batumi-இன் கொடி
கொடி
பத்தூமி Batumi-இன் சின்னம்
சின்னம்
நாடுசியார்சியா
தன்னாட்சிக் குடியரசுஅத்ஜாரா
நிறுவல்8-ஆம் நூற்றாண்டு
நகர அங்கீகாரம்1866
அரசு
 • நகர முதல்வர்கியோர்கி எர்மக்கோவி[1]
பரப்பளவு
 • மொத்தம்64.9 km2 (25.1 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்1,54,100[2]
நேர வலயம்ஜியார்ஜிய நேரம் (ஒசநே+4)
அஞ்சல் குறியீடு6000-6010
தொலைபேசி குறியீடு(+995) 422
இணையதளம்Official website

புவியியல்தொகு

இதன் நகரமையம் துருக்கிய எல்லையில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.

சனத்தொகைதொகு

பத்தூமியின் சனத்தொகையின் அளவில் கடந்த சில நூற்றாண்டுகளாக பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 19ம் நூற்றாண்டில் உரூசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் பத்தூமி வந்த பின், பத்தூமியில் உரூசிய மக்களின் விகிதம் கடுமையாக உயர்ந்தது. 1886 இல் பாதுமியின் சனத்தொகை ஏறக்குறைய 14,800 ஆக இருந்தது. இதில் 23.4% ஆர்மேனியர், 20,1% கிரேக்கர், 17% ஜோர்ஜியர், 11,2% உரூசியர், 8,4% துருக்கியர், 6,3% யூதர், 3,7% அப்காசன் ஆக இருந்தனர். 20ம் நூற்றாண்டில் ஜோர்ஜியர்களின் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்தது. 1939 இல் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 70,000 ஆக உயர்ந்திருந்தது. இதில் 41% ஜோர்ஜியர், 29,1% உரூசியர், 17,2% ஆர்மேனியர், 5,5% கிரேக்கர், 2,5% யூதர் ஆக இருந்தனர். இவர்களுடன் குர்திய சமூகத்தினர் 0,5% மும், உரூசியசெருமானியர் 0,3% மும், அசீரியர் 0,3% மும் இருந்தனர்.[5] 20 ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் சனத்தொகை அளவில் இன்னும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2014 இன் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 152.839 ஆக உயர்ந்திருந்தது. இதில் 93,4% ஜோர்ஜியர், 3,0% ஆர்மேனியர், 1,9% உரூசியர், 0,4% அப்காசர், 0,2% உக்கிரைனர், 1,5% கிரேக்கர் ஆக இருந்தனர்.[6]</nowiki>]]</ref>

காலநிலைதொகு

பத்தூமியின் சராசரி ஆண்டு வெப்பநிலை 14°C ஆகும். அதி வெப்ப நியையைக் கொண்ட மாதங்கள் ஆடியும், ஆவணியும் ஆகும். இம் மாதங்களில் சராசரி வெப்பநிலை 22°C ஆகும். பத்தூமியின் அதி குறைந்த வெப்பநிலை 7°C. அதி கூடிய வெப்பநிலை 40°C. அதி ஈரப்பதன் கொண்ட மாதம் ஜனவரி ஆகும்.[7]

பல்கலைகழகம்/கல்லூரிதொகு

பத்தூமியில் ஷொற்றா றொஸ்ராவெலி மாநில பல்கலைக்கழகம் (Batumi Shota Rustaveli State University)[8] உட்பட மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. மற்றும் ஒரு கலைக்கல்லூரியும், ஒரு கடற்படை பயிலகமும் (Batumi Navigation Teaching University)[9] உள்ளன.

விமானநிலையம்தொகு

பத்தூமியில் ஒரு விமானநிலையம் உள்ளது. இது ஜோர்ஜியாவின் மூன்றாவது பெரிய விமானநிலையமும், ஜோர்ஜியாவின் மூன்று சர்வதேச விமானநிலையங்களில் ஒன்றும் ஆகும். இது பத்தூமியின் நகர்ப்புறத்திலிருந்து தென்மேற்காக நான்கு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ் விமான நிலையம் மே 26, 2007 இல் இருந்து இயங்குகிறது.

அருங்காட்சியகம்தொகு

 
பாத்துமி ஸ்ராலின் அருங்காட்சியகம்

பத்தூமியில் பத்தூமி ஸ்ராலின் அருங்காட்சியம் (Batumi Stalin Museum) என்றதொரு அருங்காட்சியகம் இருந்தது. குறைந்த பார்வையாளர்களே வருகை தந்து கொண்டிருந்ததால் 2013இல் இது மூடப்பட்டு விட்டது.[10]

தாவரவியற் பூங்காதொகு

1852 இல் பாத்தூமியில் நிறுவப்பட்ட தாவரவியற் பூங்கா 114 ஹெக்கடர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 5,000 க்கும் அதிகமான இனத் தவாரங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 3,300 இன மரங்கள் உள்ளன.[11]

வெளி இணைப்புகள்தொகு

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தூமி&oldid=3268681" இருந்து மீள்விக்கப்பட்டது