பத்மா இராகவன்
பத்மா இராகவன் (Padma Raghavan) ஒரு கணினி விஞ்ஞானி ஆவார். இவர் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கான துணை ஆசிரியராக பணிபுரிகிறார்.
பத்மா இராகவன் | |
---|---|
துறை | கணினி அறிவியல் |
பணியிடங்கள் | வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
இராகவன் காரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் 1985-இல் தொழில்நுட்ப பட்டத்தினை 1985ஆம் ஆண்டு பெற்றார்.[1] பின்னர் முனைவர் பட்டத்தினை 1991-இல் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்திலிருந்து, அலெக்சு போத்தன் ஆய்வு மேற்பார்வையில் அணி சிதைவுக்கான இணையான அல்காரிதம்கள் பற்றிய ஆய்விற்ஆகப் பெற்றார். இராகவன் டென்னசி பல்கலைக்கழகம் மற்றும் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 2000-இல் பென் மாநிலத்திற்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பென் மாநிலத்தில், இவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராகவும், ஆராய்ச்சிக்கான துணைத் தலைவராகவும், மூலோபாய முயற்சிகளின் இயக்குநராகவும் ஆனார். இவர் 2016-இல் வாண்டர்பில்ட்டிற்கு துணைப் பணியாளராக மாறினார்.[2]
2002ஆம் ஆண்டில், இராகவன் மரியா கோபெர்ட் மேயர் புகழ்பெற்ற அறிஞர் விருதை வென்றார், ஆர்கோன் தேசிய ஆய்வகத்தைப் பார்வையிட இவருக்கு நிதியளிக்கப்பட்டது.[3] இவர் 2010இல் கணினி ஆய்வு சங்கத்தின் சி. ஆர். ஏ.-டபுள்யூ[4] விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் 2013-இல் ஐ. இ. இ. இ.சக உறுப்பினர் ஆனார்.[2] அமெரிக்க அறிவியல் மேம்பாட்டிற்கான கழகத்தின் சகாவாக 2022-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
இராகவனின் கணவர், கணிதவியலாளர் ஸ்டீவ் சிம்ப்சன், இவருடன் பென் மாகாணத்திலிருந்து வாண்டர்பில்ட்டுக்கு குடிபெயர்ந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Curriculum vitae (PDF), 2015, பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ 2.0 2.1 2.2 Moran, Melanie (December 2015), "Vanderbilt names Padma Raghavan as vice provost for research", Research news @ Vanderbilt, Vanderbilt University, பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "On the move", Chicago Tribune, March 5, 2002, archived from the original on 2016-06-04, பார்க்கப்பட்ட நாள் 2024-02-07.
- ↑ Padma Raghavan Distinguished Lecture Series, Computing Research Association, October 12, 2010, archived from the original on 2016-06-04, பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "2022 AAAS Fellows | American Association for the Advancement of Science (AAAS)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-15.
வெளி இணைப்புகள்
தொகு- Padma Raghavan publications indexed by Google Scholar