பத்மா வெங்கட்ராமன்
பத்மா வெங்கட்ராமன் (Padma Venkataraman) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் இரா.வெங்கடராமனின் மூத்த மகளான இவர்[1] 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] பெண்கள் இந்திய சங்கத்தின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.[3] பெண்கள் நலப் பிரச்சினைகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[4][5] ஐ.நா.வுக்கான அகில இந்திய மகளிர் மாநாட்டின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்ததோடு, ஐக்கிய நாடுகளின் மகளிர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.
விருதுகள்
தொகு30 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தொண்டாற்றி வந்த சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனின் சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவ்வையார் விருது வழங்கி இவரை சிறப்பித்தது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former first lady Janaki Venkataraman dies". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2010-08-14. Archived from the original on 2010-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
- ↑ Ramachandran, Mythily (2012-08-16). "'Amma' a beacon of hope". Gulf News.
- ↑ "Theosophical Society: Women's Indian Association to mark centenary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2017-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Keerthana, R. (2012-05-01). "Women Power: Disease does not bog them down" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/features/downtown/women-power-disease-does-not-bog-them-down/article3425160.ece.
- ↑ S, Gowri (2019-03-06). "Head full of colours" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/art/head-full-of-colours/article26446239.ece.
- ↑ "Padma Venkataraman bestowed with Avvaiyar award". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2017-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
- ↑ "பத்மா வெங்கட்ராமனுக்கு அவ்வையார் விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-23.