பத்மினி தியான்
பத்மினி தியான் (Padmini Dian) என்பவர் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளராக கோட்பாட் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது ஒடிசா சட்டப் பேரவையில் துணி, கைத்தறி மற்றும் கைவினைத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[1]
பத்மினி தியான் | |
---|---|
கைத்தறி துறை அமைச்சர் | |
தொகுதி | கோட்பத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1986 |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
துணைவர் | சதாசிவ தியான் |
வாழிடம் | தாமனகந்தி |
மூலம்: [odishaassembly |
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பத்மினி தியான் கோட்பாட் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்திர சேகர் மஜியை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2]
பத்மினி தியான் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது கோட்பாட் மக்களுக்குப் பெருமை சேர்த்த தருணம். நூற்றுக்கணக்கான உள்ளூர் கைத்தறி நெசவாளர்களின் நம்பிக்கையாக இவர் காணப்பட்டார். [3] இவர்களின் கலை வடிவம் மறைகிறது என்ற பிசுவநாத் ராத் திரைப்படமான கோட்பேட் வீவிங்: தி ஸ்டோரி ஆஃப் எ ரேஸ் அகென்ஸ்ட் டைம் இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கை
தொகுபத்மினி தியான் கோட்பாட் அருகே தாமனகந்தி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவர், விவசாயி ஆவார். இவர் ஒடிசா மாநிலச் சட்டசபையில் அமைச்சராக உள்ளார். இவர் பிப்ரவரி 2020-ல் தெய்வீக துணி [4] என்ற உள்ளூர் கை நெசவு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்.
தியான், தனது சமூகப் பணிகளுக்காகவும், மக்களுடன் நெருக்கமாக இருப்பதற்காகவும் அறியப்பட்டவர். இவர் பல தோட்டப் பட்டறைகள் மற்றும் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். பல சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினராகவும் தியான் உள்ளார்.
மேலும் பார்க்கவும்
தொகு- கோட்பேட் கைத்தறி துணிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Council Of Minister". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
- ↑ "Kotpad Assembly Elections 2019, Kotpad Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
- ↑ Pattnaik, Satyanarayan (31 May 2019). "Debutant minister Dian brings hope to weavers | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
- ↑ "'Divine Fabric' book released by Minister Padmini Dian". Pragativadi: Leading Odia Dailly (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.