பத்ருத்தீன் அஜ்மல்
பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (பிறப்பு: பிப்ரவரி 12, 1950) இந்திய மாநிலமான அசாமில் பிறந்தவர்.[2] துப்ரி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[3] உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் அவர் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளார்.[4]
பத்ருதீன் அஜ்மல் | |
---|---|
2010இல் அஜ்மல் | |
நாடாளுமன்ற உறுப்பினர் துப்ரி நாடாளுமன்ற தொகுதி | |
பதவியில் 16 மே 2009 – 04 சூன் 2024 | |
முன்னையவர் | அன்வர் மாலிக் |
தொகுதி | துப்ரி |
இயக்குநர், சைகுல் ஹிந்த் அகடமி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 பெப்ரவரி 1950 கொஜாய், அசாம், இந்தியா[1] |
அரசியல் கட்சி | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (2013 முதல்) |
முன்னாள் மாணவர் | தாருல் உலூம் தியோபந்த் |
தொழில் | அரசியல்வாதி, வணிகர் |
பத்ருதீன் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AUDF) நிறுவினார்,[5] இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AIUDF) நிறுவி செயல்பட்டுவருகின்றார். மேலும் இவர் அசாம் மாநில ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராகவும் உள்ளார். தாருல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அரபியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவர்.[6]
மக்களவை உறுப்பினராக
தொகுஅஜ்மல் 2004, 2009, 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பாக துப்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அறப்பணி
தொகுஅசாமின் ஹோஜாயில் உள்ள ஹாஜி அப்துல் மஜித் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய பொது அறக்கட்டளையின் (Haji Abdul Majid Memorial Public Trust) நிர்வாக அறங்காவலர் ஆவார். இந்த அறக்கட்டளை கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பதர்பூருக்கு அருகிலுள்ள மாலுவாவில் பதர்பூர் மருத்துவமனையையும் அறக்கட்டளையின் கீழ் நிறுவியுள்ளார். [6]
சான்றுகள்
தொகு- ↑ https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4436[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "AIUDF President". Archived from the original on 17 May 2011. Retrieved 13 May 2011.
- ↑ "15th Lok sabha members, Assam, India". Archived from the original on 25 September 2015. Retrieved 30 June 2012.
- ↑ "Times of India on 22 most influential Muslims in India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-14.
- ↑ http://www.aiudf.org AIUDF Official Website
- ↑ 6.0 6.1 "Bioprofile of 15th Lok Sabha members, India". Archived from the original on 2 November 2016. Retrieved 30 June 2012.