பந்த்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

பந்த் அல்லது துளுநாட்டு சத்திரியர் (துளு: ಬಂಟರ; கன்னடம்: ಬಂತವರು) என்றழைக்கப்படுவோர் துளு மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் துளுநாட்டைச் சேர்ந்தவர்கள்.

பந்த்
ಬಂಟರ

கிருஷ்ணதேவராயன் · ஐஸ்வர்யா ராய் · ஷில்பா ஷெட்டி
மொத்த மக்கள்தொகை
(1,500,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கர்நாடகம், கேரளா
மொழி(கள்)
துளு (தாய் மொழி), கன்னடம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நாகவம்ச சத்திரியர், நாயர், சமபந்த சத்திரியர்

பந்த் என்றால் துளு மொழியில் வீரர் என்று பொருள். பந்துகள் இந்து மதத்தினர் ஆவர். இவர்களின் முதல் தெய்வம் ஆதி சக்தி எனினும், பிற தெய்வங்களான சிவன், விஷ்ணுவையும் வணங்குகின்றனர். மேலும் வினாயகர், கிருட்டினன், முருகன், மாரியம்மன் போன்ற கடவுள்களையும் வணங்குவர். அனைத்து கடவுள்களும் ஆதி சக்தியின் வடிவமே என்று எண்ணுகின்றனர். இவர்கள் தங்கள் நாடான துளுநாடு பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்புகின்றனர். இவர்களின் அடிப்படை உணவு அரிசி உணவாகும். மீன் போன்ற அசைவ உணவுகளையும் உண்பர். கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இந்த பந்த் மக்களின் பாரம்பரிய வீடுகளான குத்தூ வீடுகள் புகழ்பெற்றவை.

மேற்கோள்கள்

தொகு
  • Thurston, Edgar (1909). Castes and Tribes of Southern India Volume I – A and B. Madras: Government Press. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்த்&oldid=3377023" இலிருந்து மீள்விக்கப்பட்டது