பனமாலி பாபு

இந்திய அரசியல்வாதி

பனமாலி பாபு (Banamali Babu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோகுல் சந்திர பாபு சரோச்சு குமாரி தம்பதியருக்க்கு மகனாக 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சேர்ந்த இவர் ஒடிசாவின் சம்பல்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 5 ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் பனமாலி பாபு 3 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும், 4 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும் சம்பல்பூர் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2][3][4]

பனமாலி பாபு
Banamali Babu
பனமாலி பாபு, ஒடிசா அரசியல்வாதி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971–1977
முன்னையவர்சரத்தாகர் சுபாகர்
பின்னவர்கணநாத் பிரதான்
தொகுதிசம்பல்பூர் நாடாளுமன்ற தொகுதி, ஒடிசா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1982–1988
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-03-09)9 மார்ச்சு 1918
சம்பல்பூர் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு30 நவம்பர் 1998(1998-11-30) (அகவை 80)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சரோச்சு குமாரி தேவ்
மூலம்: [1]

பனமாலி பாபு 1998 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதியன்று தனது 80 ஆவது வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Inkworld. National Union of Journalists (India). 1976. p. 28. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
  2. The Election Archives. Shiv Lal. April 1972. p. 6. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
  3. Sir Stanley Reed (1976). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 712. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
  4. "Banamali Das and His Times in the Princely State of Nilgiri" (PDF). Odisha Review. Archived from the original (PDF) on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனமாலி_பாபு&oldid=4109189" இலிருந்து மீள்விக்கப்பட்டது