பனவாசி மதுகேசுவரா கோயில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்துக்கோயில்

பனவாசி மதுகேசுவரா கோயில் (Banavasi Madhukeshwara Temple) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நகரமான சிர்சியிலிருந்து 24 கிமீ (15 மைல்) தொலைவில் பண்டைய கோயில் நகரமான பனவாசியில் அமைந்துள்ளது. இது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும்.[1] ஒரே கல்லாலான கல் மஞ்சமும், மண்டபமும் இந்தக் கோவிலின் உன்னதக் கலைப்படைப்புகளாகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.

பனவாசி மதுகேசுவரா கோவில்
Banavasi Madhukeshwara Temple
பனவாசி மதுகேசுவரா கோயில் is located in கருநாடகம்
பனவாசி மதுகேசுவரா கோயில்
அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: கருநாடகம்
மாவட்டம்:வடகன்னட மாவட்டம்
ஆள்கூறுகள்:14°32′07″N 75°01′02″E / 14.5352632°N 75.01711550652684°E / 14.5352632; 75.01711550652684
கோயில் தகவல்கள்
இணையதளம்:uttarakannada.nic.in/SirsiTourism.html

வரலாறு

தொகு

மதுகேசுவரா கோயில் கர்நாடகாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் கன்னடத்தின் முதல் இராச்சியமான கதம்ப வம்சத்தால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.[2] கதம்ப இராச்சியம் சாளுக்கியர்களின் எழுச்சி வரை கர்நாடகாவின் பெரும் பகுதிகளை ஆண்டது. சாளுக்கியர்கள் மற்றும் ஒய்சாலர்கள் போன்ற பிற வம்சங்களின் ஆட்சியின் போது மதுகேசுவரா கோயில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.[3]

படக்காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sirsi Tourism". uttarakannada.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  2. "Banavasi Madhukeshwara Temple". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  3. "Madhukeshwara Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.

புற இணைப்புகள்

தொகு