பனிப்பாறைகள்
பனிமலைகளின் துண்டுகளே பனிப்பாறைகள் ஆகும். இவை பிரிந்து உருகி, பின் பெருங்கடலில் கலக்கின்றன. பனிப்பாறை வெண்மை நிறத்தில் சிறிய காற்று நுண்குமிழிகளுடன் காணப்படும். நீர்க்குமிழிகளின் பரப்பு வெண்மை நிற ஒளியைப் பிரதிபலிப்பதால் பனிப்பாறை முழுவதும் வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. பனிக்கட்டியில் நீர்க்குமிழி இல்லாதிருக்கும் போது நீலநிறமாகத் தெரியும். இதற்குக் காரணம் வானத்தின் நீல நிறத்தைப் பிரதிபலிப்பதே ஆகும். இன்றைய உலகின் அதிகரிக்கும் நன்னீர்த் தேவைக்குப் பனிப்பாறை மூலம் கிடைக்கும் நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதே ஒரு சிறந்த தீர்வாகும். வடஇந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் இருந்தே தோன்றுகின்றன. பனிப்பாறை நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதில் உள்ள இரண்டு நேர்மறையான சூழ்நிலை விளைவுகள். மனித இனம் நீர்நிலைகளைச் (ஆறு, ஏரிகள்) சார்ந்திருத்தல் வெகுவாகக் குறைகின்றது. இதனால் சூழ்நிலைமண்டலத்தில் மனிதத் தாக்கமும் குறைகிறது.பனிப்பாறை நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதின் மூலம் துருவப்பகுதிகளில் உள்ள பனிமலைகள்உருகுவதனால் ஏற்படும் கடல்மட்டஅளவு உயர்வினைக் குறைக்கலாம்.