பனேஷ்வர் கண்காட்சி

பனேஷ்வர் கண்காட்சி என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பனேஷ்வர் என்ற இடத்தில் நடைபெறும் பழங்குடிகளின் கண்காட்சியாகும். விக்ரம் சம்வத் நாட்காட்டியில் மாக் மாதத்தில் வரும் அமாவாசை இரவுக்கு அடுத்த 2 வாரங்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில், சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் இடமான பனேஷ்வரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. [1] பழங்குடியினரின் கலாசாரத்தில் அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நடைபெறும் இந்த கண்காட்சி "பழங்குடியினருக்கான கும்பமேளா " என்றும் அழைக்கப்படுகிறது. [2]

கண்காட்சி

தொகு

பனேஷ்வர் கண்காட்சி உண்மையில் இரண்டு கண்காட்சிகளின் கலவையாகும். பனேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டு மிகவும் மதிக்கப்படும் துறவியான புனித மாவ்ஜியின் மருமகள் ஜான்குன்வர் விஷ்ணு கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை முடித்ததைக் கொண்டாடும் வகையில் மற்றொரு திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விரு கண்காட்சிகளும் இணைந்து ஒரே கண்காட்சியாக நடந்து வருகிறது. [3]

மாகா சுக்ல ஏகாதசி அன்று தான், மாவ்ஜியின் அஜே மற்றும் வாஜே என்ற இரு சீடர்களால் சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் டெல்டா இடத்தில் கட்டப்பட்ட லக்ஷ்மி-நரேன் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்து, இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது.

பூசாரி அல்லது மத்ததிஷ் என்று அழைக்கப்படுபவர், சப்லாவிலிருந்து ஊரின் பொது இடத்திற்கு பெரிய ஊர்வலமாக குதிரையின் மீது மாவ்ஜியின் 16 செ. மீ அளவுள்ள வெள்ளி உருவத்தோடு வந்து ஆற்றில் நீராடுகிறார்கள்.  மாததீஷ்கள் குளிக்கும்போது நதி நீர் புனிதமாகிறது என்று கூறப்படுகிறது. இதனால், மக்கள் அவருடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கின்றனர். பின்னர் லட்சுமி நாராயண கோவிலில் மத்தாதிஷ் ஆரத்தி செய்யப்பட்டு, ராஸ்லீலா இரவில் மீண்டும் காட்சியளிக்கிறது.


துங்கர்பூர், உதய்பூர் மற்றும் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பில்கள் அல்லது பழங்குடி மக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த  கண்காட்சி மிகவும் பிரபலமானதும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பனேஷ்வர் என்ற சொல் பொதுவாக சிவபெருமானையும், சோம், மஹி மற்றும் ஜகத் நதிகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ள மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் குறிக்கும்.

விழாவின் சிறப்பு அம்சங்கள்

தொகு
  • பக்தர்கள் கோதுமை மாவு, பருப்பு, அரிசி, வெல்லம், நெய், உப்பு, மிளகாய், தேங்காய் மற்றும் ரொக்க பணம்  ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர்.
  • கோயிலுக்கு அருகில் பல்வேறு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு பக்தர்கள் தங்கி மாலையில் நடைபெறும் கலைவிழாக்களை கண்டு அனுபவிக்கின்றனர்.
  • பில் பழங்குடி சமூகத்திலிருந்து தோன்றிய ராஜஸ்தானின் புகழ்பெற்ற நடன வடிவமானகூமர்இந்த விழாவில் ஆடப்படுகிறது.
  • நகைகள், பழங்கால பொருட்கள், சால்வைகள் மற்றும் பிற உள்ளூர் கலைப்பொருட்களை வாங்கக்கூடிய பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மாலை வேளைகளில், பக்தர்கள் நெருப்பை சுற்றி சுற்றி நடனமாடுவதை மிகவும் வண்ணமயமாகவும், ஆரவாரமாகவும் காணப்படும்.
  • மிகவும் பிரபலமான ராசலீலா நிகழ்ச்சியுடன் கோவிலில் நாட்டுப்புற நடனம், கூத்து, மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறுகின்றன

கலாச்சார நிகழ்ச்சிகள்

தொகு

பனேஷ்வர் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பில் பழங்குடி மக்கள் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களை உச்ச குரல்களில் ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் நெருப்பைச் சுற்றி அமர்ந்து பாடுகிறார்கள். கலாச்சார நிகழ்ச்சிகள் வெவ்வேறு பழங்குடி குழுக்களின் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிராம மக்களின் குழுக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகப்படுத்தப்படுகின்றனர். [4]

நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற நடனங்கள், மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள், விலங்குகளின் நிகழ்ச்சிகள், தெருக்கூத்துக்கள் மற்றும் வித்தைகள் ஆகியவைகள் பெருமளவில் கண்காட்சி நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே நடைபெறும் மேலும் ஊசலாட்டங்கள், மகிழோட்டம்  போன்றவை சிறுகுழந்தைகள் உற்சாகத்தை கூட்டுகின்றன. கண்காட்சியில் ஏராளமான கடைகள் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பரமான பொருட்கள் வரை எதை வேண்டுமாலும் வாங்கவும் விற்கவும் வாய்ப்பு உள்ளது.

துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள பனேஷ்வர்ரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

தெய்வம் : சிவலிங்கம்

கோவில் : மகாதேவ் கோவில்

விழாக்காலம் : பிப்ரவரி மாதம்

மேற்கோள்கள்

தொகு
  1. Bhattacharya, A.N. (2000). Human Geography of Mewar. Udaipur: Himanshu Publications.
  2. "பழங்குடியினரின் கும்பமேளா".
  3. "பனேஷ்வர் கண்காட்சி ராஜஸ்தானின் பழமையான பக்கத்தை ரசிக்க ஒரு வாய்ப்பாகும்".
  4. "பனேஷ்வர் கண்காட்சி 2023".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனேஷ்வர்_கண்காட்சி&oldid=3777581" இலிருந்து மீள்விக்கப்பட்டது