துங்கர்பூர்
துங்கர்பூர் (Dungarpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தெற்கே 501.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
துங்கர்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°50′N 73°43′E / 23.84°N 73.72°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | துங்கர்பூர் |
தோற்றுவித்தவர் | மன்னர் துங்கர் சிங் |
பெயர்ச்சூட்டு | மன்னர் துங்காரியா பில் [1] |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | துங்கர்பூர் நகராட்சி |
ஏற்றம் | 225 m (738 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,706 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• பேச்சு மொழி | வாக்டி மொழி (பில் மொழியின் வட்டார வழக்கு) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இந்திய சீர் நேரம் | 314001 |
தொலைபேசி குறியீடு | 02964 ****** |
வாகனப் பதிவு | RJ-12 |
பாலின விகிதம் | 1:1 ♂/♀ |
இணையதளம் | dungarpur |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 30வார்டுகளும், 10,347 வீடுகளும் கொண்ட துங்கர்பூர் நகரத்தின் மக்கள் தொகை 47,706 ஆகும். அதில் ஆண்கள் 24,900 மற்றும் பெண்கள் 22,806 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,502 மற்றும் 5,481 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.43%, இசுலாமியர் 24.36%, சமணர்கள் 9.31%, சீக்கியர்கள் 0.22% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tourism.rajasthan.gov.in › ... Web results Dungarpur Tourism: Tourist Places in Dungarpur - Rajasthan Tourism
- ↑ Dungarpur Population, Religion, Caste, Working Data Dungarpur, Rajasthan - Census 2011
ஊசாத்துணை
தொகு- Dungarpur Rajya ka Itihasa (History: Kingdom of Dungarpur), by Gaurishankar Hirachand Ojha, First published 1936. Publisher: Rajasthani Granthaghar, Jodhpur 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87720-01-8.