பன்னாட்டு உணவு விடுதி சங்கம்

பன்னாட்டு உணவு விடுதி சங்கம் (International Hotel & Restaurant Association) என்பது விடுதி மற்றும் உணவகத்தொழில்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச வர்த்தக சங்கமாகும்.

International Hotel & Restaurant Association
சுருக்கம்IHRA
உருவாக்கம்November 1947
வகைTrade association
சட்ட நிலைNon-profit company
நோக்கம்Umbrella trade association for worldwide hotel restaurant industry
தலைமையகம்42 Avenue General Guisan, லோசான், 1009 Pully-Switzerland
சேவை பகுதி
Global
உறுப்பினர்கள்
Respective national trade associations
ஆட்சி மொழி
English and French
President
Dr. Ghassan Aïdi
மைய அமைப்பு
Executive Committee
வலைத்தளம்IHRA http://www.ih-ra.org

வரலாறு

தொகு

ஜனவரி 1869: ஜெர்மனியில் உள்ள கோப்லென்ஸில் உள்ள ஹோட்டல் ட்ரையரில் நாற்பத்தைந்து விடுதி உரிமையாளர்கள் சந்தித்து, தொழில்துறையில் வளர்ச்சி மற்றும் அமைப்பை எளிதாக்கும் நோக்கத்துடன் அனைத்து விடுதி உரிமையாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். அந்த நாட்களில், விடுதிகள் வேறுபட்ட தரத்தில் இருந்தன. மேலும் அவற்றின் தேவைகளைத் தொடர்புகொள்வதற்கும் அவர்களின் வணிகத்தைத் தக்கவைப்பதற்கும் வலுவான குரல் தேவைப்பட்டது.

பன்னாட்டு அளவில் அணைத்து நாட்டு உணவு விடுதி சங்கங்களையும் ஒன்றிணைத்து அந்த்ந்த நாட்டு உணவு விடுதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கலந்து ஆலோசித்து சாதகமான தீர்வை கொண்டுவருவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போது இந்த சங்கம் தனது அலுவலகங்களை ஜெனீவா, பாரிஸ் மற்றும் பார்சிலோனாவிற்கு விரிவுபடுத்தியுள்ளது, வாஷிங்டன் டி. சி மற்றும் ஆங்காங்கில் புதிய சர்வதேச அலுவலகங்கள் விரைவில் திறக்கப்பவுள்ளன.[1]

செயல்பாடு

தொகு

தேசிய பயிற்சித்திட்டங்களை தயாரிப்பதற்காக ஐநாவின் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஐரோப்பிய அமைப்பு யுனெஸ்கோ ஆகியவற்றுடன் கலந்து ஆலோசனை செய்கிறது. அத்துடன் உலக் சுற்றுலா அமைப்பின் துணை கொண்டும் செயல் படுகிறது.பயிற்சி நடக்கும் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் குறித்த குறிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது. பன்னாட்டு உணவு விடுதி கையேட்டை ஆண்டுதோறும்.வெளியிடுகிறது.

சுற்றுலா பயனிகள் பயனடையுமாறு சுற்றுலா பற்றிய தகவல்கள் இச் சங்கத்தின் சுற்றுலா கண்ணோட்டம் ஆகியவை அடங்கிய பன்னாட்டு உணவு விடுதி மதிப்புரையையும் வெளியிடுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "About Us". International Hotel & Restaurant Association. 2010. Archived from the original on 10 March 2010. பார்க்கப்பட்ட நாள் 20 February 2010.
  2. சுற்றுலா- சாந்தா பப்ளிசர்ஸ்-சென்னை

வெளி இணைப்புகள்

தொகு