பன்னாட்டு உலகப் பழங்குடிகள் நாள்
பழங்குடி மக்களை பாதுகாக்க
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் (International Day of the World's Indigenous Peoples) உலகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்த பழங்குடியினர் செய்யும் சாதனைகளையும் பங்களிப்புகளையும் இந்த நிகழ்வு அங்கீகரிக்கிறது. 1982-இல் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான துணை ஆணையத்தின் பழங்குடி மக்கள்தொகைக்கான ஐ.நா பணிக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நாளைக் குறிக்கும் வகையில், இந்நாள் திசம்பர் 1994 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் முன்மொழியப்பட்டு, 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1][2]
நாள் | 9 ஆகத்து (ஆண்டு தோறும்) |
---|---|
அமைவிடம் | உலகளாவியது |
இந்தியாவில்
தொகுஇந்தியாவில் ஆகத்து 9 அன்று பழங்குடி குறவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Background – International Day of the World's Indigenous People". United Nations. https://www.un.org/en/events/indigenousday/background.shtml. பார்த்த நாள்: 9 August 2011.
- ↑ "வனமக்கள் வாழ்க்கை வளம்பெற". பெ.சண்முகம். தீக்கதிர் தமிழ் நாளிதழ். 9 ஆகத்து 2014. p. 4. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2014.
வெளி இணைப்புகள்
தொகு- International Day of the World's Indigenous Peoples on the ஐக்கிய நாடுகள் அவை website
- International Day of the World’s Indigenous Peoples on the United Nations Department of Economic and Social Affairs website
- World's Indigenous Peoples Kingston, Ontario, Canada's Celebration by Ollin