பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) பிலிப்பைன்ஸ் நாட்டின் லொஸ் பனோஸ், லாகுனாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பதினேழு நாடுகளில் 1,300 ஊழியர்கள் பணியாற்றும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[5][6] 1960 களில் ஆசியாவில் தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி மூலம் நன்கு அறியப்பட்டது.[7]

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1960
வகைபன்னாட்டு இலாபநோக்கற்ற ஆராய்ச்சிப் பயிற்சி மையம்
நோக்கம்ஆராய்ச்சி
தலைமையகம்லொஸ் பனோஸ், லாகுனா, பிலிப்பீன்சு
சேவை பகுதி
உலகளாவியது
பணிப்பாளர் நாயகம்
முனைவர். மத்தியூ மொரேல்[1][2]
சார்புகள்CGIAR
வரவு செலவு திட்டம்
US$92.02 மில்லியன் (2015)[3]
பணிக்குழாம்
>1,000[4]
வலைத்தளம்www.irri.org

வறுமை மற்றும் பட்டினியைக் குறைத்தல், நெல் விவசாயம் பண்ணும் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் சுகாதாரத்தை மேம்படுத்தல், மற்றும் நெல் விவசாயத்தில் நிலைப்பேறான சுற்றுச் சூழலை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு 1960இல் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அது கூட்டு ஆராய்ச்சி, பங்களிப்பு, மற்றும் IRRI பணியாற்றும் நாடுகளில் தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் வலுப்படுத்துதல் என்பவற்றை அதன் நோக்கமாக முன்னெடுக்கிறது.[8]

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், பன்னாட்டு விவசாய ஆராய்ச்சி மையங்களின் கூட்டமைவு(CGIAR) உள்ளடக்குகின்ற, உலகளாவிய உணவு பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும். இது ஆசியாவின் மிகப்பெரிய இலாபநோக்கற்ற விவசாய ஆராய்ச்சி மையமாகவுமுள்ளது.[9]

தோற்றம் தொகு

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது போர்ட் அறக்கட்டளை, ராக்பெல்லர் அறக்கட்டளை, மற்றும் பிலிப்பைன்ஸ் அரசின் ஆதரவுடன் 1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [10]

தாக்கம் தொகு

1960, 1970 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஆசியாவின் "பசுமை புரட்சி" இயக்கத்தில் அதன் பங்களிப்பு காரணமாக பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் நன்கு அறியப்படுகிறது. நிலத்தில் சாய்ந்து விழுதல் காரணமாக உயரமான நெல் வர்க்கங்கள் பாதிப்படைந்த வேளையில் குட்டையான நெல் வர்க்கங்களை அறிமுகப்படுத்தியமையே அந்த முக்கியத்துவமாகும். பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட IR8 உள்ளிட்ட குட்டையான நெல் வர்க்கங்கள் 1960 களில் இந்தியாவைப் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றியது..[11] இதனால் உருவாக்கப்பட்ட வர்க்கங்கள் IR வர்க்கங்கள் என பரவலாக அறியப்பட்டு, பல ஆசிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2005 ல் உலகின் நெல் பயிரிடப்பட்ட நிலப்பகுதியில் 60%, இதன் கலப்பின நெல் வகைகள் அல்லது அதன் சந்ததியில் இருந்து நடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[12]

2011 இல் ஆஸ்திரேலிய பன்னாட்டு வேளாண் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெற்காசியாவில் மூன்று நாடுகளில் ப.நெ.ஆ.நி 1985 க்கும் 2009 க்கும் இடையில் மேற்கொண்ட இனவிருத்தி செயற்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.46 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெல் விளைச்சல் 13% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.[13]

ப.நெ.ஆ.நி, சீன வேளாண் அறிவியல் அகாடமி,பெய்ஜிங் ஜீனோமிக்ஸ் நிறுவனம் (BGI) என்பன இணைந்து "3,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நெல்குடும்பங்களின் சரியான மரபணுக்களை முதன்முதலில் அடையாளம் கண்டுள்ளமை நெல் அறிவியலில் முக்கிய முன்னேற்றம் ஆகும்."[14]

ப.நெ.ஆ.நி,யின் அலுவலகம் காணப்படும் நாடுகள் தொகு

பின்வரும் நெல் பயிரிடும் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் ப.நெ.ஆ.நி,யின் அலுவலகங்கள் உள்ளன:

மேற்கோள்கள் தொகு

  1. "IRRI Trustees announce next director general" இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160115161441/http://irri.org/next-irri-director-general-named. பார்த்த நாள்: 16 December 2015. 
  2. "IRRI leadership changes hands during stirring turnover ceremony". http://irri-news.blogspot.com/2015/12/irri-leadership-changes-hands-during.html. பார்த்த நாள்: 17 December 2015. 
  3. "IRRI website: 2015 Annual Report" இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161010045622/http://irri.org/resources/publications/annual-reports/annual-report-2015. பார்த்த நாள்: 9 October 2016. 
  4. "IRRI website: Our people". http://irri.org/about-us/our-people. 
  5. "IRRI website: About IRRI". http://irri.org/about-us/our-organization. 
  6. "International Rice Research Institute on Google maps". http://maps.google.com/maps/ms?ie=UTF8&hl=en&msa=0&msid=216500419896071727279.00047e4961aea61049e8c&ll=13.410994,82.792969&spn=74.853042,112.675781&source=embed. 
  7. "A bigger rice bowl". The Economist. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  8. "IRRI - Our mission". பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  9. "International Rice Research Institute celebrates its 50th Anniversary". Manila Bulletin (Manila Bulletin Publishing Corp.). 9 December 2009 இம் மூலத்தில் இருந்து 19 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120819170451/http://www.mb.com.ph/articles/233238/international-rice-research-institute-celebrates-its-50th-anniversary. 
  10. "An adventure in applied science: A history of the International Rice Research Institute". https://books.google.com/books?id=3d-6iv9xQT0C&pg=PR13&lpg=PR13&dq=rockefeller+ford+irri+1960&source=bl&ots=JBOEJEE_A2&sig=ifmdZbpjtxKHm0GvdEIqWPjvBZY&hl=en&sa=X&ei=N8s8T87bAuuNiAeNju3nBA&redir_esc=y#v=onepage&q=rockefeller%20ford%20irri%201960&f=false. 
  11. Hugo Restall (21 November 2014). "Growing a Second Green Revolution". WSJ. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  12. "IR varieties and their impact". https://books.google.com/books?id=z-LL_xQZbZYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. 
  13. "ACIAR report: International Rice Research Institute’s contribution to rice varietal yield improvement in South-East Asia". http://aciar.gov.au/publication/IAS074. 
  14. Chandran, Nyshka (22 September 2015). "Asia scientists take big leap toward 'rice of the future'". CNBC. http://finance.yahoo.com/news/asia-scientists-big-leap-toward-rice-future-021448007.html. பார்த்த நாள்: 28 September 2015.