பன்பூர் அருங்காட்சியகம்

பாக்கித்தான் நாட்டிலுள்ள ஓர் அருங்காட்சியகம்

பன்பூர் அருங்காட்சியகம் (Banbhore Museum) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள பன்பூரில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். பன்பூர் தொல்பொருள் அருங்காட்சியகம் என்ற பெயராலும் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று பாக்கித்தான் அரசாங்கத்தின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையால் பன்பூர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. அருங்காட்சியகம் 1967 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று முறைப்படி திறக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் , அருங்காட்சியகத்துடன் பன்பூரின் தளம் சிந்து அரசாங்கத்தின் கலாச்சாரத் துறைக்கு மாற்றப்பட்டது. [1]

வரலாறு தொகு

பன்பூரின் தொல்லியல் தளத்தில் ஒரு குடியேற்றத்தின் ஏராளமான எச்சங்கள் மறைந்துள்ளன.[1]

பன்பூர் ஒரு பழமையான தொல்பொருள் தளமாகும். இந்த நகரம் 2100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம் என கருதப்படுகிறது. ஐதராபாத் மாவட்டத்தில் கராச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் மூங்கில் ராசாவின் தலைநகராக இருந்தது என்றும் அவரது நினைவாக பெயரிடப்பட்டது என்றும் அறியப்படுகிறது. பல்வேறு வரலாற்று புத்தகங்கள், சில வரலாற்று அறிஞர்கள், அறிஞர்கள் தொல்லியலாளர்கள் பன்பூரை தெபால் என்ற பெயரால் அங்கீகரித்து அடையாளப்படுத்துகின்றனர். பன்பூர் நகரத்திலிருந்து இசுலாமியர்கள் துணைக்கண்டத்திற்குள் நுழைந்ததால் இந்த நகரம் இசுலாத்தின் அடையாளமாகவும் அறியப்படுகிறது. பூர்வாங்க அகழ்வாராய்ச்சி 1928 ஆம் ஆண்டு மசூம்தாராலும் 1951 ஆம் ஆண்டு அல்காக் என்பவராலும் தொடங்கப்பட்டது. [1] [2] [3] [4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Banbhore Museum". sindhculture.gov.pk. Archived from the original on 10 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
  2. "Banbhore". www.pktravel.pk. Archived from the original on 10 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
  3. "Bhambore (also called Banbhore)". www.pakistantoursguide.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
  4. "Ruins of Banbhore". thekarachiwalla.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.

புற இணைப்புகள் தொகு