பன்வாரி லால் சர்மா

இந்திய அரசியல்வாதி

பன்வாரி லால் சர்மா (Banwari Lal Sharma, 1939 / 1940 – 23 அக்டோபர் 2024) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பணியாற்றியுள்ளார். வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்களை தோற்கடித்த ஒரு மூத்த இந்திய அரசியல்வாதியாக இவர் அறியப்படுகிறார்.[1] [2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இராசத்தான் மாநில அரசியலில் செயல்பட்டார் மற்றி, அமைச்சராகவும் பணியாற்றினார். இராசத்தான் மாநில சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [3]

பன்வாரி லால் சர்மா
Banwari Lal Sharma
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிதோல்ப்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1939 / 1940
தோல்பூர், இராஜபுதனம் முகமை, இந்தியா
இறப்பு (அகவை 84)
தோல்பூர், இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு பாரதிய சனதா கட்சி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பன்வாரி லால் சர்மா இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகருக்கு அருகில் உள்ள தோல்பூர் நகரில் பிறந்தார். இவர் முக்கியமான செகன் குடும்பத்தைச் சேர்ந்தவர், இக்குடும்பம் இராசத்தான் மாநில அரசியல் மற்றும் தொழில்முனைவுத் துறைகளில் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு குடும்பமாகும்.

அரசியல் வாழ்க்கை

தொகு

ஆரம்ப ஆண்டுகள் மற்றும் பிரதிநிதித்துவம்

தொகு

சர்மா தனது அரசியல் பயணத்தை 1972 ஆம் ஆண்டில் தொடங்கினார், காங்கிரசு கட்சியின் வலுவான ஒரு போட்டியாளராக உருவெடுத்தார். இவரது தளராத அர்ப்பணிப்பு, தோல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தொடர்ந்து எட்டு முறை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தது.

அமைச்சர் பணி

தொகு

சர்மாவின் தலைமைத்துவ திறன்கள் விரைவில் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டன. இத்தகுதி இராசத்தான் அரசாங்கத்தில் இவர் ஓர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இவரது மந்திரி பதவிக் காலம் முழுவதும், சர்மா பல்வேறு மாநில முடிவுகள் மற்றும் கொள்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.

மற்ற அரசியல் பிரமுகர்களுடனான உறவு

தொகு

ஒரு குறிப்பிடத்தக்க தேர்தல் போரில், சர்மா முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை தோற்கடித்தார். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த தேர்தல் போட்டியின் நினைவுகள் இருந்தபோதிலும், சர்மா, அவரது மகன் அசோக் மற்றும் வசுந்தரா ராசே ஆகியோருக்கு இடையே குறிப்பிடத்தக்க நெருக்கம் உருவானது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சர்மா ஒரு அரசியல் பிரமுகர் மட்டுமல்ல, குடும்பத்தின் தந்தையும் கூட. இவரது மகன், அசோக் சர்மா, பாரதிய சனதா கட்சியில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நபராக இருந்தார். மேலும் 2022 ஆம் ஆண்டில் இவரது அகால மரணத்திற்கு முன்பு வசுந்தரா ராசேவுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்டார் [4] இவரது மருமகன் இரித்தேசு சர்மா, தோல்பூர் நகராட்சி மன்றத்தில் தலைவராக இருந்தார்.

அரசியலுக்கு அப்பால், இராசத்தான் பிராமண சமுதாயத்தின் தலைவராக சர்மாவின் செல்வாக்கு பரவியிருந்தது. தோல்பூர், பிந்த், மொரேனா, கரௌலி, மாதோபூர் மற்றும் தோசா ஆகிய இடங்களில் இவரது தாக்கம் விரவியிருந்தது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dholpur by-poll: Cong fields Banwari Lal" (in ஆங்கிலம்). March 18, 2017. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  2. "Dholpur by-poll result not a vote for development but a victory of govt machinery: Sachin Pilot" (in ஆங்கிலம்). April 14, 2017. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  3. "Indian National Congress Party". பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  4. "धौलपुर: पूर्व मंत्री बनवारी लाल शर्मा के पुत्र एवं BJP के कद्दावर नेता अशोक शर्मा का निधन" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  5. "Ashok Sharma Death: जगन की विरासत के सच्चे वाहक का निधन, पूर्वी राजस्थान में ब्राह्मण समाज के एक युग का अंत" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வாரி_லால்_சர்மா&oldid=4156707" இலிருந்து மீள்விக்கப்பட்டது