பமீலா சாட்டர்ஜி
பமீலா சாட்டர்ஜி (Pamela Chatterrjee) என்பவர் இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தினைச் சார்ந்த எழுத்தாளர் மற்றும் கிராமப்புற ஆர்வலர் ஆவார். இவர் தனது களப்பணி மற்றும் செயல்திட்டத்தின் மூலம் சுமார் 625,000 ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளார். இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. நாரி சக்தி விருது இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும்.
பமீலா சாட்டர்ஜி | |
---|---|
நாரி சக்தி விருது பெறும் காட்சி | |
பிறப்பு | c.1930 |
தொழில் | எழுத்தாளர், செயல்பாட்டாளர் |
தேசியம் | இந்தியா |
வாழ்க்கை
தொகுபமீலா சாட்டர்ஜி 1930 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] சாட்டர்ஜி இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தில் குமான் பகுதியில் வசிக்கிறார்.[2]
நிலத்தினைப் பண்படுத்தும் திட்டத்தினை, சாட்டர்ஜி உலக வங்கி நிதியுதவியுடன் துவங்கி 4,600 ஹெக்டேர் நிலத்தை மீட்க முடிந்தது. இத்திட்டம் 95 விவசாயிகளுடன் தொடங்கியது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.[3] சம்பந்தப்பட்ட நிலத்தில் அதிக சோடியம் இருந்தது. இந்த மண் உப்புத் தன்மையுடையதாக அறியப்படுகிறது. ஆனால் இங்குப் பயிரிடப்பட்ட நெல் அறுவடை, பாரம்பரிய வயல் விளைச்சலை விட அதிக மகசூல் ஈட்டியது.[1]
இவர் "மலைகளைக் கேளுங்கள்: ஒரு இமாலய இதழ்" எனும் நூலை 2005இல் வெளியிட்டார். [2]
இவரது, நிலத்தினைப் பண்படுத்தும் திட்டத்தில் சுமார் 10,000 விவசாயிகள் சேர்ந்தனர். இவர்கள் மூலம் 625,000 ஹெக்டேர் நிலம் பண்படுத்தப்பட்டது.[3]
2012ஆம் ஆண்டில் "தி ஜாமூன் மரம்" என்ற தலைப்பில் தனது பண்ணை அனுபவங்களை எழுதி புத்தகமாக வெளியிட்டார்.[4] இந்தப் புத்தகத்தில் தனது திட்டத்தை விவரித்து இதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் நினைவுகளை உள்ளடக்கியதாக எழுதினார்.[3] இந்தப் புத்தகம் ஆன்மீகத் தலைவர் ரமேஷ் ஓசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் உலக வங்கியின் டெல்லி அலுவலகத்தில் முனைவர் அசோக் கோஸ்லாவால் வெளியிடப்பட்டது.[5]
இவருக்கு 2017ல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உடனிருந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு
- ↑ 1.0 1.1 India, Government of (2018-03-08), English: Pamela Chatterjee biog from official twitter feed, பார்க்கப்பட்ட நாள் 2020-04-12
- ↑ 2.0 2.1 Chatterjee, Pamela; Addor-Confino, Catherine (2005). Listen to the mountains: a Himalayan journal (in ஆங்கிலம்). Viking, Penguin Books India.
- ↑ 3.0 3.1 3.2 "The Jamun Tree and other stories on the environment by Pamela Chatterjee buy online". bookstore.teri.res.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
- ↑ Chatterjee, Pamela (2012-01-01). The Jamun Tree and other Stories on the Environment (in ஆங்கிலம்). The Energy and Resources Institute (TERI). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7993-440-1.
- ↑ "Sarvodaya Ashram". sashram.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.