பம்பை ஆறு
(பம்பா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.
பம்பை ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | வேம்பநாட்டு ஏரி |
நீளம் | 176 கி.மீ (110 மைல்) |