பம்பா பாக்யா
பம்பா பாக்யா (31 அக்டோபர் 1972 –1 செப்டம்பர் 2022) பாக்கியராஜ் என்றும் அழைக்கப்பட்ட) இந்திய பின்னணிப் பாடகரும் இசைக்கலைஞரும் ஆவார். இவர் முக்கியமாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பில் பல படங்களில் பின்னணி பாடினார்.[2] பிரபல தென்னாப்பிரிக்க இசைக்கலைஞர் பம்பாவைப் போலவே தனக்காகவும் பாடல்களைப் பாடுமாறு ஏ. ஆர். ரகுமான் கேட்டுக் கொண்டதை அடுத்து இவர் பம்பா பாக்யா என்ற பெயரைப் பெற்றார். பின்னர் அந்தப் பெயர் மேடைப் பெயராகவும், இவருடைய அடையாளமாகவும் மாறியது. இவர் தனது தனித்துவமான குரலுக்காக நன்கு அறியப்பட்டவர்.[3]
பம்பா பாக்யா | |
---|---|
பிறப்பு | [1] | 31 அக்டோபர் 1972
இறப்பு | 1 செப்டம்பர் 2022 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 49)
தேசியம் | இந்தியன் |
பணி | பாடகர் |
தொழில்
தொகுபாக்யா ஷங்கரின் இயக்கத்தில் 2.0 திரைப்படத்தில் புல்லினங்கால் என்ற பாடலில் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர். இப்பாடல் உடனடி வெற்றி பெற்றதுடன் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தது. திரையுலகில் பாடுவதற்கு முன்பு, இவர் பெரும்பாலும் பக்திப் பாடல்களைப் பாடினார்.[4] இவரது அகால மறைவிற்கு முன், மணிரத்னத்தின் வரலாற்று நாடகப் படமான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் பின்னணி பாடினார்.[2]
மறைவு
தொகுபாக்யா 2022 செப்டம்பர் 1 அன்று தனது 49 வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.[3] இவர் கடுமையான நெஞ்சுவலி இருப்பதாக கூறியிருந்ததை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.[5][6]
பாடிய பாடல்கள்
தொகுஆண்டு | பாடல் | திரைப்படம் | மொழி | இசையமைப்பாளர் |
---|---|---|---|---|
2018 | புல்லினங்கால் | 2.0 | தமிழ் | ஏ. ஆர். ரகுமான் |
சிம்டாங்காரன் | சர்கார் | ஏ. ஆர். ரகுமான் | ||
2018 | டிங்கு டாங்கு | சர்வம் தாளமயம் | ஏ. ஆர். ரகுமான் | |
2019 | காலமே காலமே | பிகில் | ஏ. ஆர். ரகுமான் | |
ராட்டி | தனிப்பாடல் | சந்தோஷ் தயாநிதி | ||
2022 | பொன்னி நதி | பொன்னியின் செல்வன் 1 | ஏ. ஆர். ரகுமான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bamba Bakya Biography, Wikipedia, Age, Family, Cause of Death, Children, Networth, Nationaliy". MayorTunesMedia (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
- ↑ 2.0 2.1 "Bamba Bakya who sang opening lines of 'Ponni Nadhi' from 'Ponniyin Selvan' passes away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
- ↑ 3.0 3.1 Bureau, The Hindu (2022-09-02). "Singer Bamba Bakya passes away at 49" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/singer-bamba-bakya-passes-away/article65839723.ece.
- ↑ "'Simtaangaran' singer Bamba Bakya passes away, he was 49". The News Minute (in ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
- ↑ "Singer Bamba Bakya, known for songs Pullinangal and Simtaangaran, dies at 49". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
- ↑ "பிரபல திரைப்பட பாடகர் பம்பா பாக்யா காலமானார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.