பயங்காவு பகவதி கோயில்

பயங்காவு பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் புரத்தூர், கவிலக்காட்டில் ஆலத்தியூர் பள்ளிக்கடவு சாலையில் அமைந்துள்ள மிகப் புனிதமான இந்து பகவதி கோயிலாகும் . இக்கோயில் திரூர் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

பயங்காவு பகவதி கோயில்
2018 கேரள வெள்ளத்தில் பயங்காவு பகவதி கோவில்

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். கோயிலின் சதுர வடிவக் கருவறையில் மூலவரின் சிலை உள்ளது. இங்கு துணைத்தெய்வங்கள் [1] உள்ளனர். இக்கோயிலில் சுத்தம்பலம் உள்ளது. [2]


இக்கோயிலில் மூன்று முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. [3] அக்டோபர் மாதத்தின் மத்தியில் துலாம் 1 ஆம் நாள், மலையாள மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மகர;ததில் மகரசொவ்வா, மலையாள நாட்காட்டியின்படி ஆண்டுதோறும் நடைபெறும் தாலப்பொலி சடங்கு ஆகியவை அந்த மூன்று விழாக்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Upadevata, Upadevatā: 6 definitions". பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
  2. "Chuttambalam in India". பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
  3. Sree Bhadra Varavu Committee.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயங்காவு_பகவதி_கோயில்&oldid=3824944" இலிருந்து மீள்விக்கப்பட்டது