உ.தனியரசு
என் உயிருக்கு உயிரான இனமானச் சொந்தங்களுக்கு வணக்கம்!
உங்கள் அடிமை தனியரசின் முதல் வணக்கம். ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் போராட நேர்மையான, உண்மையான, நம்பிக்கையான ஓர் இயக்கம் தேவை என்பது தற்கால அரசியல் சூழ்நிலையில் கட்டாயம் என்பதனால் மறைந்த நம்மினக் காவலர் அய்யா கோவை செழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 14.3.2001 அன்று கோவை மாநகர் எஸ்.என்-அரங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நாளன்று துவக்கி எட்டாண்டுகளாய் வேகமாக கொங்கு மக்களின் பேராதரவோடு வளர்ந்து வருகின்ற இயக்கம்தான் நம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.
கோவை செழியனார் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே பதவிக்கும் ,பணத்திற்க்கும் ஆசைப்பட்ட இந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் தனி இயக்கம் கண்டு தன்மானத்தை இழந்து ,கொங்கினத்தை விட்டு தனித்து போயினர். செழியனார் அவர்களின் மறைவுக்கு பிறகும் வெளியேறினார்கள்.இதனால் இயக்கத்தின் கொள்கைகள் மட்டுமின்றி கொங்கினத்தின் பெருமைகளும் சிதைக்கப்பட்டன. இவர்களால் இயக்கம் என்பது அல்ல,தனிநபர் சொத்து என்றாகிவிட்டது . இயக்கத்தின் கொள்கைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்த நேரத்தில் கொங்கினத்தின் தன்மானத்தையும் அடிப்படை உரிமைகளையும் நாம் இன சமூக நீதியை நிலை நாட்டவும் இடைவிடாது இரவு பகல் பாராமல் இந்த எட்டாண்டு காலமாக நேர்மையாக கட்டமைக்கப்பட்ட இயக்கம் தான் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.