பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி
மேய்க்கால் புறம்போக்கு நிலம் அல்லது மேய்ச்சல் நிலம் என்பது மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைக்காலங்களில் வறண்டும் காணப்படும் புல்வெளி நிலம் ஆகும். சங்க காலத்தில் இவ்வகை நிலம் முல்லைத் திணை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலத்தைச் சுற்றிப் பெருகும் பல்லுயிர் சூழல் இயங்குகிறது. தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மேய்ச்சல் நிலம், மந்தைவெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தது. . இந்த நிலத்தில் மாடுகளின் கழிவுகளைச் சேர்த்து, பின் அதை வயல்களில் உரமாகப் பயன்படுத்துவர். மேய்ச்சல் நிலங்களே கால்நடைகளின் முக்கிய மேய்ச்சல் ஆதாரம் ஆகும்.
மேய்க்கால் நிலம் குறித்த வழக்கும், தீர்ப்பும்
தொகுதமிழகம் முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் மக்கள் நலத்திட்டம் சார்ந்த பொது பயன்பாடுகளுக்கோ அல்லது அந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள மூன்றாவது நபர்களுக்கோ வகை மாற்றம் செய்து பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. .
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அத்தகைய மேய்ச்சல் நிலங்களை எந்தவொரு குடியிருப்பு அல்லது தொழில்துறை நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் தமிழக அரசின் 97 திட்டங்களுக்கு மேய்க்கால் நிலங்களை பயன்படுத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. [1][2]