Kavingar sathishkumar

✍️ கவிஞர் இரா. சதீஸ்குமார் ✍️✍️

கவிஞர் இரா.சதீஸ்குமார் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் நாள் பிறந்தார். இவர் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

தந்தை : ந. இராஜேந்திரன்

தாய் : இரா. சந்திரா.

இவரின் தந்தை மற்றும் தாய் சிறுவயதிலேயே அதவது 12 வயதிலேயே மரணத்தை தழுவினார்கள். இவருடைய சிறு வயதில் அன்பு, அரவணைப்பு  என்ற வார்த்தையே இல்லாமல் போயிற்று. இவர் பல வருடங்களாவே

இன்னல்கள் , துயரங்களை கடந்து வந்தவர்.

யாருடைய முயற்சியுமின்றி தன்னுடைய வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டார். பாளையத்தில் தொடக்கக்கல்வி பயின்றார். குரும்பலூரில் உயர்நிலை,மேல்நிலை  கல்வி முடித்தார்.

ஆதரவின்றி தவிக்கும் நிலையில் தனக்கான எந்த உறவுகளும் இல்லை என்று வருந்தினார். அன்புக்காட்டவும் , எடுத்துக்கூறவும் யவரும் இல்லை. தன் கல்வியில் கூட கவனம் செலுத்த முடியவில்லை.

விரும்பிய பொருளை வாங்கவும் , ஆசப்பட்டதை செய்யவும் பணம் இல்லை. மாற்றுத்தாய் இருந்தும் அவரை கவனித்துக் கொள்ளவில்லை. மாற்றாந்தாய்க்கு வேளை செய்யவும், ஆடுகளை மேய்ப்பதற்கும் இவரை உபயோகப் படுத்திக்கொண்டனர். இதனால் அவர் பாதியிலே தன் படிப்பை நிறுத்தினார். ஆனால் இவருக்கு கல்வி கற்கும் ஆர்வம் இருந்தது.

இருப்பினும் இவர் 10 ,12 ஆம் வகுப்பை முடித்தார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைத்த இவர் , தனக்கான ஒரு வேளையை பார்த்துக்கொண்டே கல்லூரி படிப்பை படிக்க நினைத்தார்.

பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - வேப்பந்தட்டையில் தன்னுடைய

முதல் பட்ட படிப்பான

(பி.ஏ.,) தமிழ் இளங்கலை பட்டம் பெற்றார்


. அதன் பின்னர்

இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) உடும்பியத்தில் முடித்தார் .


இதன் மூலம் தமிழின் ஆர்வம் இவருக்கு அதிகமானது.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - குரும்பலூரில் முதுகலை பட்டம்

( எம்.ஏ.,) தொலைதூர கல்வியில் முடித்தார்.

தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழையும், தமிழ்க்கவிதையையும் அதிகம் படித்து தானாகவே எழுத்து திறனை வளர்த்துக் கொண்டார்.

தன்னுள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தவும், மற்றவர்களுக்கு பயன்படும் வகையிலும்

வலையொளி பக்கமாக :

(Kavingar Sathish Official) என்ற YouTube channel

(கலைஞனின் கவிதை சோலை)

இணையத்தில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இதில் நம்மை கருவில் சுமக்கும் தாய், மனதில் சுமக்கும் தந்தை, தாயிக்கு அடுத்தபடியான சகோதரி (அக்காள்), தந்தையின் மறு உருவம் சகோதரர் (அண்ணன்), தன்னோடு கொஞ்சி விளையாடும் தம்பி, தங்கை, தமிழ் கதைகள், பாரம்பரிய உணவு போன்றவை எடுத்துரைக்கும் தாத்தா, பாட்டி ( முதியோர்) போன்ற அனைத்து உறவுகளையும் வர்ணித்து அழகழகான தமிழ்கவிதைகளும் , ஆச்சரியம் நிறைந்த காதல் கவிதைகளும் இதில் எழுதி உள்ளார். விடுகதைகள், திருக்குறள், புதிர்கள், பொதுஅறிவு, வள்ளுநர்கள், இசை, சிறுகதை, செய்திகள், தமிழ் பெருமைகள், விருதுகள், விஞ்ஞானிகள், பலரின் வாழ்க்கை வரலாறு, போன்ற அற்புதம் நிறைந்த காதல் கவிதைகளை எழுதி உள்ளார்.

தன்னுடைய கவிதிறனை இதனோடு மட்டும் இல்லாமல்

"கவிஞர் "

என்ற சொல்லிற்கேற்ப

" இந்த மலரும் இணையுமா?"

என்ற நூலை எழுதியுள்ளார்.

இது போன்ற பல திறன்களை கொண்டு திகழ்ந்தவர் தான் சதீஸ்குமார்.

மேலும் கவிதை நூல்களை எழுதி வருகிறார் ........

Kavingar sathish