சுகந்தி கீர்த்தனா
அம்மைநோய் கால்நடை உருவாக்கம்
அம்மை நோய் என்பது [1]வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV) மூலமாக தொற்றக்கூடிய நோயாகும். இது ஒரு டி.என்.ஏ வைரஸ் ஆகும். இது ஹெர்பஸ் வைரஸ் என்ற குழுவைச் சேர்ந்தது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்க கூடியது. பெரியவர்களும் கால்நடைகளும் கூட இதனால் பாதிப்படையக் கூடும். இந்த வைரஸ் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிற கொப்புளங்களை தோற்றுவித்து நமைச்சல், எரிச்சலை உண்டாக்குகிறது .
கால்நடைகளில் அம்மைநோய்
இந்த அம்மை நோய் மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளில் மாடு, பன்றி, ஆடு, குதிரை, ஒட்டகம், குரங்கு போன்ற பாலூட்டிகளையும் தாக்கக் கூடியது. அதைப் பொருத்து இதை ஆட்டம்மை, மாட்டம்மை என்று அழைக்கின்றனர். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தோல் மூலமாகவோ அல்லது சுவாசிக்கும் காற்றின் மூலமாகவோ மற்றவர்களுக்குப் பரவுகிறது.
அறிகுறிகள்
கால்நடைகளுக்குத் தீவிர காய்ச்சல் ஏற்படுதல்
தோலில், மடிக்காம்புகளில்[2] சிவப்பு நிற புண்கள் தோன்றுதல்
பசியின்மை
கொப்புளங்களில் இருந்து நீர் வடிதல்
கண், மூக்கு போன்ற பாகங்களின் உட்சவ்வுகள் அழுகிப் போதல்
தடுப்பு நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்ட கால்நடையைத் தனியாக வைத்துப் பராமரித்து வர வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி போட்டு வருவது சிறந்தது.
- ↑ "What is varicella zoster?". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
- ↑ "பொதுவான நோய்கள்". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.