மா கோமகன்
நான் ராஜகுமார் தற்போது மா கோமகன் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதி வருகிறேன் எனது பிறப்பிடம் விருதுநகர் 02-05-1958 ல் பிறந்தேன் எனது தந்தை மாரியப்பபிள்ளை தாய் சுப்புலட்சுமி என் உடன் பிறந்தோர் இருவர் சேர்த்து நாங்கள் மூவர் தொடக்கப்பள்ளி உயர்நிலைபள்ளி படிப்பு மற்றும் டி. பார்ம் படிப்பு அனைத்தும் விருதுநகரில். 1982 முதல் 1996 வரை தமிழ்நாடு நிலஅளவைத் துறையில் பணியாற்றினேன் பின்னர் 1996 முதல் 2016 வரை மருத்துவத் துறையில் சென்னையில் பணிபுரிந்தேன் சென்னையில் பணிபுரியும் போது அண்ணாமலை பல்கலைகழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் தமிழ் முதுகலை படித்து பட்டம் பெற்றேன். 31-05-2016 ல் பணி ஒய்வு பெற்றபின் எனது முழுநேரப்பணி படிப்பதும் கவிதை எழுதுவதுமாகும். சிறுகதை, குறுங்கதை எழுதும் உத்தேசம் உள்ளது. என் கவிதைகளை "கவிதைகள் | மா கோமகன்" என. Youtube ல் தேடிபார்த்து படிக்கலாம் ரசிக்கலாம் எனக்கு பாராட்டுகளை விட விமர்சனங்கள் பிடிக்கும்.