மா கோமகன்
வாருங்கள்!
வாருங்கள், மா கோமகன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
கவிதை என் கவிதைகள்
தொகு01.
- காதல் மின்னல்*
உன்னை காண்பதற்கு சன்னல் ஒரத்தில் தவமாய் தவமிருந்து நான் காவல் காத்திருக்க நீ சன்னலை கடந்து போகலிலே பாரத்த ஒருநொடிப் பார்வையில் உன் காதல் மின்னல்கள் எனக்குள் மின்னியதடி என் அருமை காதலியே
மா கோமகன்
==============
தொகு02
- காதல் வாசம்*
என் காதலை உன்னிடம் சொல்வதற்கு மட்டும் கவிதைகள் பல எழுதித் தர நீ அதை கசக்கி எறிந்த போதும் அதை முகர்ந்து பார்க்கையிலே அதிலுன் காதல் வாசம் அரைகுறையாய் வீசுதடி என் காதலியே
மா கோமகன்
==============
தொகு03
- காதல் மொழி*
நம்மைச்சுற்றி பலரும் கூடியிருந்தாலும் நாம் இருவர் மட்டும் பேசிட உலகப் பொதுமொழி சைகை மொழியிருக்க மற்ற மொழிகளிலுள்ள வார்த்தைகளெல்லாம் வீண் தானே என் காதல் கண்மணியே
மா கோமகன்
==============
தொகு04
- பார்வை நேரம்*
உன்னைப் பார்க்கும் மணித்துளிகள் நொடிப் பொழுதாய் கழியுதடி எனக்கு
உன்னைப் பார்க்காத நொடிகளோ யுகமாய் மாறியே வதைக்குதடி என்னை
யுகங்கள் உண்மையில் நான்கு தானாமே நான் இதுவரை நாலாயிரம் யுகங்களை கடந்து வாழ்ந்து விட்டேனே உன் கடைகண் பார்வை இழந்த நொடிகளெல்லாம்
மா கோமகன்
==============
தொகு05
- காதல் மலர்*
பூக்கள் பூப்பதற்கு காரணம் மகரந்தசேர்க்கை தானாம் நீ உணர்ந்திருக்கிறாயா அதனை நாமிருவரும் முதன் முதலாய் சந்தித்த போது நமது இருவரது கண்களும் கலந்த நொடிப் பொழுது அது தானடி என் கண்ணின் கருமலரே
மா கோமகன்
==============
தொகு06
- காதல் தேன்நிலவு*
வானத்து நிலா அதன் குளிரச்சியெல்லாம் வந்திறங்கி எனக்குள் புகுந்து விட்டது போல உன் நினைவு எனக்குள் தோன்றிடவே எனக்குள்ளே நான் அடைந்ததெல்லாம் துன்பமன்றி இன்பமில்லை என் காதல் தேன்நிலவே
மா கோமகன்
==============
தொகு07
- காதல் பிம்பம்*
நாமிருவர் முதன்முதலாய் பார்த்த போதே நாம் நமது பார்வைகளோடு இதயத்தையும் இடம் மாற்றிக் கொண்டதாலே என் வீட்டு கண்ணாடியில் என்னை பார்க்கும்போது உன் முகமாய் தெரியுதடி உனக்கும் அப்படித்தானோ
மா கோமகன்
==============
தொகு08
- பொருந்தாக் காதல்*
காதல் வயப்படும் காளை பருவத்தினரே காதலில் பலவகை உண்டெனினும் பொருந்தாக் காதல் என்ற ஒரு வகையும் உண்டென அறிவது அவசியமென உணருங்கள்
அப் பொருந்தாக் காதல் என்பதன் இயல்பு எவை என சிந்தித்தால்
அகவையில் முதியோர் ஆணாயினும் அன்றிப் பெண்னாயினும் தனது அகவை திறம் இதுவென அறியாமல் தன்னினும் மூத்தோரிடமோ மிககுறை வயதினரிடமோ கொள்வது பொருந்தாக் காதலே
இளமை தீர்ந்த முதுமைப் பருவத்தில் காமம் எனக்கு குறைவதில்லை என்பதும் பொருந்தாக் காதலில் சேர்வது இயல்பு
பார்க்கும் எல்லா எதிர் பாலினத்தவர் பலரிடம் தோன்றும் காதலும் கூட பொருந்தாக் காதலின் வகையென கொள்க
கரை கடந்த காதல் மிகு உணர்வால் விருப்பமிலா எதிர் பாலினத்தினரிடத்து வலிந்து காதல் உரைத்தல் பொருந்தாக் காதலாகுமே
பிறன் மனை நோக்கா பேரான்மை மறந்த ஆடவர் பெண்டிர் மனதில் களிபுற தோன்றும் காதலும் கூட பொருந்தாக் காதல் என கொள்வீர்
பொருந்தாக் காதலால் விளவது யாவும் துன்பம் அழிவும் என்பதே இறுதி என உணர்வோமே
மா கோமகன்
==============
தொகு09
காதலை வேறெப்படிச் சொல்வது?
காதலை சொல்வதெப்படி என்பதனை உற்று நோக்க வரும் பிற விளவுகளின் இறுதியிலேயே காதலை வேறெப்படிச்சொல்வதென சிந்தை
இன்றைய காலகட்டத்தில் இருபாலினத்தவர்களும் ஏற்படும் காதல் உணர்வை உரைப்பதற்கோ பகிரி, முகநூல், மின்னஞ்சலென ஏராள மின்னனுவியல் வழிமுறை இருப்பதாலே எளிதே என்பேன்
என்னை பொருத்தமட்டில் காதலென்ற மனவுணர்வு எதிர்பாலினத்தவர்க்கு புரியவைக்க பிறந்தவை கலாச்சாரமும் நாகரீகமும் என்பேன்
முதன்முதல் தன் காதல் உணர்வு சொல்ல குகை வாழ் மனித இனம் கண்டது சைகை எனும் மொழி என்பேன்
சைகையில் உணர்த்தியும் புரியாத போது எழுந்தது மொழி என்றேன்
மொழி பேச கற்ற மனித இனம் தன் காதலையே உயர்வாக எடுத்துசொல்ல பிறந்தன இலக்கியங்கள் என நான் இயம்பிடவும் தேவையுண்டோ
நம் தமிழ் மொழியில் மட்டுமே இலக்கியங்கள் சிறப்பு கூற எழுதப்பட்ட இலக்கணங்களிலும் தான் காதல் பேசும் இயல்கள் உண்டென உரைக்கவும் வேண்டுமோ
காதல் உணர்வதனை சொல்வதற்கு முதலில் சைகை பின் பேச்சுமொழி அதன் வளர்ச்சி எழுத்து, எழுத்தில் மடல் கதை கவிதை இலக்கியமென வளர்ந்து இன்று காதல் மின்னனுவிலும் மிளிர்ந்து நிற்றல் கண்டோமே
சைகை பேச்சு எழுத்து என ஒவ்வொருகட்டமாய் மனித இனம் வளர்ச்சியடைந்தும் இன்றுவரை காதலைச் சொல்ல இவையனைத்தும் மறையாது வளர்ந்தென அறிந்த பின்னர் காதலை வேறெப்படிச் சொல்வதென கேள்வியொன்று எழ
இன்னுமெத்துணை வளர்ச்சி மனித இனம் பெற்றாலும் அத்துணையும் காதலைச் சொல்வதற்கே என்பேன் ஏற்பீரோ
மா கோமகன்
==============
தொகு10 போட்டிக் கவிதை *உன்னுடனான என் பயணங்களில்*
உன் நினைவு என்னும் பெட்டகத்தில் இன்றுமே உறந்துள்ளாதாவென்று எனக்கு தெரியவில்லை
நாமிருவரும் நட்பென பழகிய கல்லூரிக் காலம் தொட்டே இன்று வரை பலருடனோ நாமிருவர் மட்டுமோ பயணித்தவை ஏராளம்
அந்தப் பயணங்களில் நம்மிடை நிகழ்ந்ததெலாம் முட்டல் மோதல் கருத்து வேற்றுமை என்பதுஉம் தாராளம்
நம்மிடையிருந்த நட்பு காலசுழற்சியில் அறிவு மாற்றமும் அறிவியல் மாற்றமும் பெற்றே நாம் காதலரென மாறிப்போன இந்நொடிப் பொழுதில்
பழைய முட்டல் மோதல் கருத்து வேற்றுமைகளும் வெளிப்படையாயில்லை நமக்குள்ளேயே இன்றும் நிகழ்ந்து கொண்டேதான் இருப்பதனாலேயே
நம்காதல் பிறர் போலன்றி பிரிந்து விடாது இன்னும் இறுக்காமாய் இணைவதே உலகில் எங்குமில்லாத அதிசயமன்றோ
மா கோமகன்
×=============
தொகு11
போட்டிக் கவிதை *காதலுக்கு முன் காதலுக்குப் பின்*
காதல் மனித இனத்தின் இருபாலினத்தவரிடையே எழும் உயர் அன்புபெருகு உன்னத நிலையாகுமே
என் காதலுக்கு முன் பின் என்னவென யோசிக்க என் வாழ்வில் நிகழ்ந்ததிதுவே
கண்டதே காட்சி எனவும் கொண்டதே கோலமென தான் தோன்றி தனமாய் நான் திரிந்திருந்த காலம் ஒருபெண் எச்செயலிலும் திட சிந்தனை தீர்க்கமான முடிவுகள் நிதான நடத்தை கொண்டவளோடு காதல் வயப்பட அவளும் என்னை காதலித்தால் இடையில் சில தவிர்க்க இயலாத பிரச்சனை சாதியத்தால் ஏற்பட்டதனால் அக்காதல் முறிந்தே முடிவு எட்டியது
அக்காதலுக்குப்பின்னர் நான் சில லட்சியங்களை ஏற்றுக்கொண்டு அதனை வெற்றி கொண்டேயாக எத்தனித்த வேளையிலே இன்னொருத்தி என்மீது காதலென வந்து நின்றாள்
இவளோ முழுமையில்லை அழகிலும் செயலிலும் என அவள் விருப்பப்படி நடத்து கொள்பவள் இக்காதலும் முறிந்ததெதனால் என வினவுவீர்களாயின் இவள் என்னைவிட வசதியிலும் செல்வாக்கில் உயர்வென உள்ள வேறொருவனை தேர்ந்தெடுத்து என்னை கழட்டி விட்டுச் சென்றாள்
என்றாலும் மூத்த காதலி முத்தமிட்டு சொல்லி சென்ற நல்லுரைகளால் முதிர்ச்சி பெற்றவனாகவே இரண்டாம் காதலுக்குபின் இருந்தேனே
இப்போது நானும் நல்ல ஒரு பெண்ணவளும் நட்புடன்பழகி வருகிறோம் இதனை இடையிருப்போர் எங்களுக்குள் காதலென சிலர் முதுகிற்கு பின்னும் சிலர் முகத்திற்கு பின்னும் பேசி வர நாங்களிருவரும் எங்களுக்குள் சிரித்துக் கடந்து செல்கிறோம்
இந்த நட்புறவு எதிர் காலத்தில் காதலாக மலருமாவென தெரியா நிலைதானிப்போதெனக்கு
மா கோமகன்
==============
தொகு12
- நடுத்தரவர்க்க காதல்*
நாங்கள் மூன்று பேர் நல்ல நண்பர்களென சிறு வயது முதல் இன்று வரை நல்லதொரு நட்புடனே பழகி வருகிறோமெனினும் வர்க்கமென வந்துவிட்டால் மூவரும் மூன்று நிலையே
வர்க்கம் மூன்றாகினும் காதலென ஒர் உணர்வு வருவது எல்லோருக்கும் சமநிலை தானன்றோ
மேல் வர்க்க நண்பனவன் காதலித்தது ஏழைப்பெண்
கீழ் தட்டு நண்பனுக்கோர் காதலி என வசதி படைத்த குடும்பத்து பெண்ணே
நடுத்தர வர்க்கமென்றே இருக்கிற என் வாய்ப்பு சமவர்க்க பெண்ணவளே
மூவர் காதலில் அவர்கள் இருவர் காதலும் வெற்றி பெற ஏழைப் பெண்ணோ இன்று பணக்கார வீட்டில் அடிமையென காலந்தள்ள
என் கீழ்தட்டு நண்பனோ வசதி படைத்தோர் வீட்டு மாப்பிள்ளையாய் வந்த வாழ்வை ஏற்றுக்கொண்டு சுதந்திரமற்ற கூண்டு பறவையென்றே தான் அவன் வாழ்வு
நடுத்தரவர்க்கத்துதித்த நானும் அவளும் நாளும் பொழுதும் எல்லாமே பேசி பேசி முடிவென எதையும் எட்டாத காரணத்தாலேயே முறிந்தது எங்கள் காதல்
ஒன்றை நான் நன்றென புரிந்து கொண்டேனே நடுத்தர வர்க்கத்தினரின் உயர்நிலை கனவென்னும் காதலும் கூட கைகூடாத நிலைதான் என்றுமே என்று தான் ஆனாலும்
நட்பென்னும் ஒர் உறவே நாட்கள்கடந்தாலும் நாளும் சிறந்ததென ஆனதனால் நடுத்தரவர்க்கத்தினரோரே உயர்நிலை கனவென்றே காதலென்னும் கானல்நீர் தவிர்த்து கடந்து சென்றே நட்புகளை போற்றிடுவீர்
மா கோமகன்
==============
தொகு13
- அவள் அழகியோ என அறியேன்*
அன்றொரு நாள் கா விரிந்த ஆற்றங்கரை அருகே அமர்ந்தே நான் கவிதை வார்த்தெடுக்க வார்த்தைகள் தேடியே காத்திருந்த வேளையிலே
என்னை கடந்தே ஒரு பெண் போனாள் அவன் பின்னாலே என் கண் போக நான் கண்டதொரு காட்சியோ
இரட்டை குடம் கொண்ட வீணையென அவளின் பின்னெழில் அழகு அதை தொடர்ந்தெழுந்ததொரு தண்டியென அவள் கார் கூந்தல் கருநாகமென உயர்ந்திருக்க
கார்கூந்தல் உயர்முடிவின் உச்சியிலே யாழி முகம் முன்புறமாய் அமைந்தென அவள்வடிவே வீணையது பின்புறமென கண்ட நான் களிப்பெய்தியே கவிதை எழுதுவதை விடுத்தேன்
கன்னியவள் பின்னழகால் கள்வெறி என் நிலையை ஊரார் அறியார் நீங்கள் அறிய மட்டும் உரைத்தேன் எனினும் அவள் அழகியோ என நானறியேனே
மா கோமகன்
==============
தொகு14
- இது ஒரு காரணமோ*
இன்றெனக்கு வாய்த்த தொடர்வண்டி பயணம் என்னிருக்கை வரிசை ஒன்றின் கடைசி இருக்கை
அவளிருக்கை என் அருகே இறுதி இருக்கை என்றே இருந்தபோது முதலில் இருவரும் தற்செயலாய் கண்ணொடு கண் நோக்கி பார்த்தோமே
ஒரு மணித்துளி கடந்தே அவள்தான் என்னோடு பேசத் துவங்கினாள்
எங்கள் இருவர் பேச்சும் நாட்டுநடப்பு கதை கவிதை என வளர்ந்த போதுதான் உள்ளத்தால் இருவரும் ஒன்றானதாக நினைப்பு எனக்கு
அவளுடைய பேச்சும் செயலும் என் கருத்தில் ஒத்துப்போக இருவருக்கும் தெரியாது இடம் மாறியதே எங்கள் இதயமென்பேன்
பயணத்தின் இறுதியான நிறுத்தம் வந்த போததோ இருவருமே ஒருவரை ஒருவர் நின்றே பார்க்க நான் சற்றுக் குள்ளம் அவளோ என்னைவிட வளர்த்தியே என்பதால்
மரக்கிளையொன்று சற்று முறிந்த சப்தம் கேட்டதுவே இருவருக்கும் மட்டுமே
அங்கே முறிந்தது மரத்தின் கிளையல்ல மனத்துதித்த காதலென உணர்ந்தே பிரிந்தோமே
இதுவும் ஒரு காரணமோ ஒரு காதல் முற்றிலும் உதிக்காமல் மறைந்து விட
மா கோமகன்
==============
தொகு15
- உன் வருகையால் என் மாற்றம்*
நீ என்னை கடந்து போன ஒரு நொடியில் என்னுள் நிகழ்ந்த மாற்றமெல்லாம் ஏற்றமா தேற்றமா என அறியேன்
என்றாலும் உன் முகநிலவு கண்ணாடி விழியில் என் விழி சந்தித்த போதே தான் இழந்ததென் உயிர் என்று அறியாயோ அன்புக்காதலி
அன்பே நீ எனக்கீவதுவே துயரமா இன்பமா என்கிற நிலை தானென்பேன் ஏற்பாயோ மறுப்பாயோ என் காதலை என்றறியா நிலை எனக்கே என்பேன் என்னுயிரே
மா கோமகன்
==============
தொகு16
- பொருந்தா காதல்*
நேற்றிரவு பேருந்துப் பயணத்தில் பக்கத்து இருக்கையில் இளம் பெண்ணொருத்தி வந்தமர்ந்தாள்
இருவரும் இரவு முழுமையும் பேசிக் கொண்டு வந்தபோது இறுதியாய் பேச்சு கவிதைப்பக்கம் வந்தது நான் கவிதைகளை அவளுக்கு காட்ட
என் அரசியல் கவிதைகளுக்கு ஆதரவும் சமூக கவிதைகளுக்கு நற் சான்றிதழும் தந்தவள் காதல் கவிதைகள் எழுவீர்களா எனக் கேட்க அவற்றையும் படித்துப் பார்த்து இறுதியில் அவள் என்னை விரும்புவதாக சொன்னாள்
நான் எனது அகவை எடுத்துக்கூறி பொருந்தா காதலென புத்திமதி கூறி என் மறுப்பை பதிவு செய்தேன்
எனக்குள் தோன்றியதோ என் இளமை பருவத்தில் இச்சம்பவம் நடந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டேன்
மா கோமகன்
==============
தொகு17
- மீட்டுவிட முடியாத மாநகர தொடர் வண்டிக் காதல்*
இன்று நான் பயணித்தது சென்னை மாநகரத்தின் புத்தம்புது அடையாளமென திகழும் மாநகர தொடர் வண்டியதனில் தான்
இங்கேயும் ஒரு காதல் எனக்குத் தான் உதிக்க மீட்டு விட முடியாதென கருதிய என் காதலை உங்களுக்குரைக்கிறேன் பொறாமை கொள்ளாதீர்
என் பயணம் நந்தனம் வரை புத்தகக் கண்காட்சி நோக்கி மாநகர தொடர் வண்டியில் என்னுடனே பயணித்தது ஏழெட்டு பேர் அதிலவள் மட்டும் பெண் இல்லையில்லை பேரெழில் அழகி
அந்த அழகு பெட்டகம் பார்வையினால் என்னை கவர என் விழி இரண்டு வழி நழுவிச் சென்ற என் இதயம் என் காதலை அவளுக்குச் சொல்ல அவசரப்பட்டது
அதற்குள் நந்தனம் வர நான் வண்டியை விட்டு இறங்கும் வேளையிலே வஞ்சியவளும் என்னுடனே இறங்கினாளே
சற்றே நடைபயணம் உடன் வந்த அவள் புத்தக கண்காட்சி செல்லும் வழி என்னிடம் கேட்கவே அதன் பதில் கொண்டு சட்டென பற்றிவிட்டேன் அவள் நட்பை
பின் புத்தக காட்சியில் இருவரும் ஒன்று சேர்ந்தே உலா வந்து அவரவர்க்கு பிடித்த புத்தகங்கள் வாங்க இவருக்குமே ஒரே வித ரசனையென அறிந்தோம்
பின்பென்ன கைபேசி எண்ணை எங்களுக்குள் மாற்றி கொண்டோம் என் மீட்டு விட முடியாதென்றே கருதிய என் காதல் வளரும் தானே
மா கோமகன்
========================== மா கோமகன் (பேச்சு) 07:54, 3 மார்ச் 2021 (UTC)
என் நண்பர் ஏகம்பவாணன்
தொகுஏகம்பவாணன் நடராஜன் என் இனிய நண்பர். இவர் திரைப்படத்துறையில் கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் என திறம்பட 1996 ஆம் ஆண்டு முதல் பணி புரிந்து வருகிறார்
இவர் பல்வேறு புகழ் பெற்ற இயக்குநர்களிடம் உதவி இய்க்குநர் இணை இயக்குநர் வசனகர்த்தா என பணியாற்றியுள்ளார்
தற்போது இரண்டு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார்
முதலாவது திரைப்படம் இயக்குநர் சுப்பிரமணிய பாரதி இயக்கத்தில் சிவா நிஷாந்த், ஜெஸ்மி, பாக்யராஜ், சீதா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகும் காமெடி கலந்த காதல் படமாகும்
இரண்டாவது திரைப்படம் இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கத்தில் சதீஷ், சிருஷடி டாங்கே ஆகியோர் நடப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படமாகும்
இவர் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் இணைச் செயலாளராக நான்கு முறையும் நிர்வாக குழு உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்
இவர் மென்மேலும் பற்பல தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி நல்ல பெயரும் புகழும் பெற மனதா வாழ்த்துகிறேன்
என் நண்பர் என், ஏகம்பவாணன் வாழ்க பல்லாண்டு அன்புடன் மா கோமகன் மா கோமகன் (பேச்சு) 08:16, 3 மார்ச் 2021 (UTC)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொகுதொல்காப்பியம் பொருளதிகாரம் எளிய விளக்கவுரை இன்று 03-03-2021 முதல் தினசரிப் பதிவாக தருகிறேன்
03/01. 01
- தொல்காப்பியம்* *பொருளதிகாரம்*
இன்றிலிருந்து இனிவரும் நாட்களில் நாம் காணவிரும்பது தொல் காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தின் நூற்பாகளும் அதற்கான எளிய விளக்கங்களுமேயாகும்.
இன்று இவ்வதிகாரம் பற்றிய சிறு குறிப்பு: உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் மட்டுமே வேறு மொழிகளில் இல்லாததென மக்களின் வாழ்வியலுக்கும் மண்ணுக்கும் இலக்கணம் கண்டுள்ள சிறப்பு பெற்றுள்ளோம் அப்பெருமை ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியரையே சாரும்
தொல்காப்பியம் தமிழுக்கு கிடைத்த முதல் நூல் என்பதனோடு ஆய்வியல் நெறி முறைக்கும் அடிப்படை நூலாகும்
ஏற்கனவே பார்த்த இரண்டு அதிகாரங்கள் போல பொருளதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன. அவை 1. அகத்திணையியல் 2. புறத்திணையியல் 3. களவியல் 4. கற்பியல் 5. பொருளியல் 6. மெய்பாட்டியல் 7. உவமையியல் 8. செய்யுளியல் 9. மரபியல் என்பனவாகும்
பொருளதிகாரத்தில் அகவாழ்வு பற்றி விளக்கும் இயல்களாக அகத்திணை இயல், களவியல், கற்பியல், பொருள் இயல், மெய்பாட்டியல் என ஐந்தும் காணப்படுகிறது
புறத்திணையியலில் போரிடும் முறைகளும், புகழின் வெளிப்பாடும் விளக்கப்படுகின்றன
மெய்பாட்டியலில் உடலில் தோன்றக் கூடிய மாறுபாடுகள் நுட்பமாக விளக்கப்படுகின்றன
உவமையியலில் செய்யுளில் பயன் படுத்தப்படும் உவமைகள் விரிவாக கூறப்பட்டுள்ளது
செய்யுளியலில் பாக்களின் எழுத்து, அசை, சீர், தளை, தொடை, அடி போன்ற உறுப்புகள் பற்றி கூறுவதோடு இலக்கிய ஆக்கத்திற்கான இலக்கணம், கோட்பாடுகள், வரையறைகள் என எல்லாம் சொல்லப்படுகிறது.
இலக்கியங்கள் படைப்பவர்கள் அவை கவிதை, புதினம், சிறுகதை என எதுவாக இருந்தாலும் அது மண்ணையும் மக்களையும் சார்ந்ததாகவே இருக்கும்.
இவ்வகை ஆற்றல் தமிழர்களுக்கு சங்க இலக்கியம், பொருளதிகாரம் ஆகியவற்றை படிக்காமலே இருக்கும் இவற்றை படித்தால் படைப்பாற்றல் இன்னும் பேராற்றலாகவே எழுச்சி பெறும் என்பதாலேயே நான் என்னால் இயன்ற வகையென நீங்கள் அறிந்து கொள்ள பொருளதிகாரம் எளிய உரையில் தருவதற்கு முயற்சித்துள்ளேன்
நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று எது எனில் தினமும் என் பதிவிற்கு மதிப்பளித்து சில மணித்துளிகள் ஒதுக்கி படிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை தங்கள் பாதங்களில் சமர்பித்து நாளை முதல் உரையை தொடங்குகிறேன்.
மேலும் ஒரு முக்கிய செய்தி பொருளாதிகாரத்தில் ஆங்காங்கே நிரவி வரும் பற்பல செயல்கள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள அவ்வப்போது சற்று விளக்கமாக கட்டுரைகளும் தரலாமென கருதுகிறேன். ஏற்பு தானே உங்களுக்கு.
நன்றியும் வணக்கமுமாக உங்கள் மா கோமகன் மா கோமகன் (பேச்சு) 08:26, 3 மார்ச் 2021 (UTC)
பொருளதிகாரம் - 1
தொகுபகுதி - 1
- தொல்காப்பியம்* பொருளதிகாரம்
இவ்வதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் இன்று முதல் தொடங்குகிறது. இதில் 58 நூற்பாக்கள் உள்ளன. இவ்வதிகாரத்தில் இது இதுவென விளக்கி சொல்வதால் உதாரணம் அதிகம் வராதென உணருக
நூற்பா 1 "கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய் முற்பட கிளந்த எழுதிணை என்ப"
விளக்கம்: கைக்கிளை முதலாக பெருந்திணை இறுதியாக உடைய ஏழும் அகத்திணைகளாகும் அவை: 1. கைக்கிளை 2. முல்லை 3. குறிஞ்சி 4. பாலை 5. மருதம் 6. நெய்நல் 7. பெருந்திணை என்பன
நூற்பா 2 "அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய படுதிரை வையம் பாத்திய வையம்"
விளக்கம்:மேற்கூறப்பட்ட ஏழு திணைகளில் கைக்கிளை, பெருந்திணை தவிர்த்திட வேண்டும் ஏனை ஐந்தில் நடுவண் அமைந்துள்ள பாலை திணை தவிர்த்து முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற திணைகள் கடல் சூழ்ந்த இவ்வுலகின் நிலைபாடாகும்.
காம உணர்வு தோன்றாதவளிடம் தலைவன் விரும்புவது கைக்கிளை. பொருந்தாக் காமம் பெருந்திணை. இவை நிலப்பாகுபாடில்லை அனைத்து நிலங்களுக்கும் பொதுவானவை.
பழந்தமிழகத்தில் பாலை இல்லை முல்லையும் குறிஞ்சியும் வறட்சியால் செழிப்பு அழிந்து பாலை நிலமாகும்
நூற்பா 3 "முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறை சிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடும் காலை"
விளக்கம்: சான்றொர்களின் பாடல்களில் காணப்படும் பொருளை ஆராய்ந்து பார்த்து 1. முதற்பொருள் 2. கருப்பொருள் 3. உரிப்பொருள் என மூன்றும் விளக்கும் முறையால் சிறந்து விளங்கும்
நூற்பா 4 "முதல் எனப்படுது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே"
விளக்கம்:இவ்வுலகை நன்கறிந்த சான்றோர்கள் நிலம், பொழுது (காலம்) என இரண்டையும் முதற் பொருள் எனக் குறிப்பிடுகின்றனர்.
நூற்பா 5 "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம் புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
விளக்கம்: 1. மாயோனாகிய திருமால் விரும்பி வாழும் காடாகி முல்லை நிலமும், 2. சேயோனாகிய முருகன் விரும்பி வாழும் மலையாகிய குறிஞ்சி நிலமும் 3. வேந்தனாகிய இந்திரன் விரும்பி வாழும் நன்னீர் நிறைந்த மருத நிலமும் 4. வருணன் விரும்பி வாழும் பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமும் என முன்னோர்களால் முறையாக வகுக்கப்பட்ட நிலமாகும் காடு - முல்லை - மாயோன் - திருமால் மலை - குறிஞ்சி - சேயோன் - முருகன் ஆறு - மருதம் - வேந்தன் - இந்திரன் பெருமணல் - நெய்தல் - வருணன்- மழைக்கடவுள்
நூற்பா 6
"காரும் மாலையும் முல்லை"
விளக்கம்: பெரும் பொழுதாகிய கார் காலமும் (ஆவணி + புரட்டாசி) சிறு பொழுதாகிய மாலை காலமும் முல்லைத் திணைக்குரியதாகும்.
நூற்பா 7 "குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்"
விளக்கம்: பெரும் பொழுதாகிய குளிர் காலம் எனப்படும் கூதிர்காலமும் (ஐப்பசி, கார்த்திகை) சிறு பொழுதாகிய நள்ளிரவு என்ற யாமமும் குறிஞ்சித் திணைக் உரிய பொழுதுகள் என்பர் புலவர்
நூற்பா 8 "பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப"
விளக்கம்:குறிஞ்சித் திணைக்கு கூதிர் காலத்தோடு முன்பனிக் காலமும் பெரும் பொழுதாக அமையும் என்பதால் சிறு பொழுதாக யாமம் கருதப்படும்
நூற்பா 9 "வைகறை விடியல் மருதம்"
விளக்கம்: சிறு பொழுதாகிய விடிவதற்கு முன்னுள்ள வைகறையும் விடியலும் மருத திணைக்கு உரியவாகும். பெரும் பொழுது குறிக்கப்படாததால் ஆண்டு முழுமையும் மருத திணைக்கு உரியது
நூற்பா 10 "எற்பாடு, நெய்தல் மெய் பெற தோன்றும்"
விளக்கம்: நண்பகலின் பின் பத்து நாழிகையும் நெய்தல் திணைக்கு சிறு பொழுதாகும் இங்கும் பெரும் பொருள் குறிக்கப்படாமையால் ஆண்டு முழுமையும் பெரும் பொழுதென கொள்க
இன்று இத்துடன் நிறைவு மீண்டும் நாளை தொடரும்
============================ மா கோமகன் (பேச்சு) 10:47, 4 மார்ச் 2021 (UTC)
பொருளதிகாரம் - 2
தொகுபகுதி - 2
- தொல்காப்பியம்* பொருளதிகாரம்
அகத்திணையியல் இன்றும் தொடர்கிறது
நூற்பா 11 "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேணிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே"
விளக்கம்: ஐந்திணைகளில் நடுவண் திணையாகிய பாலைத் திணைக்கு சிறுபொழுது நண்பகலாகும் பெரும் பொழுது வேனில் காலமாகும் வேனில் எனில் முதுவேனில் (சித்திரை, வைகாசி) இளவேனில் (ஆனி, ஆடி) ஆகியவையாகும்
நூற்பா 12 "பின்பனி தானும் உரித்து என மொழிப"
விளக்கம்: பாலைக்கு இளவேனில், முதுவேனிலுடன் பின்பனிக் காலமும் (மாசி, பங்குனி) உரியது
நூற்பா 13 "இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றும் உரியது ஆகும் என்மனார் புலவர்"
விளக்கம்: பாலைத் திணை பிரிவுகள் இருவகைப்படும் அவை தலைவியை தலைவன் பிரிந்து செல்வதும், தலைவியை தலைவன் உடன் போக்கில் கொண்டு செல்லும் போது தமரை (உறவினர்) பிரிவதும் ஆகும்
நூற்பா 14 "திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப புலன் நன்கு உணர்ந்த புலமையோரே
விளக்கம்: முதற் பொருள் ஒரு திணைக்கு உரியது இன்னொரு திணையோடு மயங்குவதில்லை எனப் புலவர்கள் குறிப்பிடுவர். ஒரு திணைக்கு உரிய நிலம் இன்னொரு திணையில் மயங்காது என்றாலும் பொழுது மயங்கி வருவது உண்டு என கொள்க
நூற்பா 15 "உரிப் பொருள் அல்லன மயங்கவும் பெறுமே"
விளக்கம்: ஒரு திணைக்குரிய உரிப் பொருள் இன்னொரு திணையில் மயங்கி வருவதில்லை. ஆனால் கருப் பொருளும், முதற் பொருளும் சிறிது மயங்கி வரலாம்
நூற்பா 16 "புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்பவை தேருங் காலை திணைக்கு உரிப்பொருளே"
விளக்கம்:தலைவனும் தலைவியும் புணர்தல், பிரிதல், பிரிந்த தலைவனுக்காக காத்திருத்தல், பிரிவுகாக வருந்தி இருத்தல், தலைவன் திரும்பி வந்ததும் ஊடுதல் என்பனவும் இவற்றிற்கான காரணங்களும் ஐந்திணைகளுக்கும் உரிய உரிப்பொருள்காகும் குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நூற்பா 17 "கொண்டுதலைக் கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும் உண்டு என மொழிப ஓர் இடத்தான"
விளக்கம்:களவு வாழ்க்கையில் தலைவன், தலைவியை அவள் தமரை விட்டு பிரித்து உடன் கொண்டு பாலை நிலத்தில் போவதும் போகும் வழியில் பிரிந்து வருவதை எண்ணி வருந்தி இரங்கலும் சில வேளைகளில் நிகழும்
நூற்பா 18 "கலந்த பொழுதும் காட்சியும் அன்ன"
விளக்கம்:தலைவன், தலைவி இருவரும் இயற்கை புணர்ச்சி நிகழ்த்திய பின்னர் முதன் முதலாக தலைவியை கண்ட போதும் ஏற்பட்ட உள்ள உணர்வுகளை இப்போது தலைவன் எண்ணிப் பார்ப்பதாகும்
நூற்பா 19 "முதல் எனப்படுவது ஆயிரூ வகைத்தே"
விளக்கம்:திணைகளுக்குரிய முதற் பொருள், கருப்பொருள், உரிப் பொருளுல் முதற் பொருள் நிலமும் பெரும் பொழுது, சிறு பொழுது என்னுத் காலமும் ஆகும்
நூற்பா 20 "தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு என மொழிப"
விளக்கம்:தெய்வம், உணவு, விலங்கினங்கள்,மரம் போன்ற தாவரங்கள், பறவைகள், பறை என்ற இசைக்கருவி, தொழில்,இசை எனப்படும் பண் போன்றவையும் பூ, நீர் என அனைத்தும் கருப்பொருள் ஆகும் உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருப் பொருள்களின் பட்டியல் இதோ கீழே: அ. *முல்லை* 1. தெய்வம் - திருமால் 2. உணவு - வரகு, முதிரை (பருப்பு) 3. விலங்கு - மான், முயல் 4. மரம் - கொன்றை, குருந்தம் 5. பறவை - கானங்கோழி 6. பறை - ஏறுகோட்பறை 7. தொழில் - ஆனிரை மேய்த்தல் 8. பண் - சாதாரி 9. பூ - முல்லைப்பூ 10. நீர் - ஆற்று நீர் இனி எண் இட்டு பொருள் மட்டும் ஆ. *குறிஞ்சி* 1. முருகன் 2. திணை, ஐவனம் (மலை நெல்) 3. யானை, புலி, பன்றி 4. வேங்கை, கோங்கு 5. மயில், கிளி 6. தொண்டகப்பறை 7. வேட்டை 8. குறிஞ்சி யாழ் 9. குறிஞ்சி 10. சுனை, அருவி இ. *பாலை* 1. கொற்றவை 2. வழிப்பறியால் வரும் உணவு 3. செந்நாய் 4. பாலை, கள்ளி, சூரை 5. எருவை (கழுகு), பருந்து 6. ஆற்றலைப்பறை 7.வழிப் பறி 8. பாலை 9. மராம்பூ 10. கூவல் சுனை (கிணறு) ஈ. *மருதம்* 1. இந்திரன் 2. நெல் 3. எருமை, நீர்நாய் 4. மருதம் 5. அன்னம், அன்றில் 6. நெல்லரிப்பறை 7. உழவு 8. மருதம் 9. தாமரை, கழுநீர் (செங் குவளை) 10. ஆற்றுநீர், பொய்கை உ. *நெய்தல்* 1. வருணன் 2. மீன்3. சுறா 4.புன்னை 5. கடற்காகம் 6. நாவாய்ப்பறை 7. மீன் பிடித்தல் 8. செவ்வழியாழ் 9. நெய்தல் பூ 10. கடல், கிணறு
இன்று இத்துடன் நிறைவு மீண்டும் நாளை காணலாம் ============================ மா கோமகன் (பேச்சு) 13:55, 5 மார்ச் 2021 (UTC)
பொருளதிகாரம் - 3
தொகுபகுதி - 3
- தொல்காப்பியம்* பொருளதிகாரம்
அகத்திணையியல் தொடருகிறது இன்றும்
நாற்பா 21 "எந் நில தருங்கின் பூவும் புள்ளும் அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும்"
விளக்கம்:ஒரு நிலத்திற்குரிய பூக்கள், பறவைகள் போன்றவை அந்நிலத்திற்கும் காலத்திற்கும் மட்டுமல்லாது பிறிதொரு நிலத்தில் காணப்பட்டாலும் காணப்படும் நிலத்தின் கருப் பொருளாகவே கருதப்படும்
நூற்பா 22 "பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய திணை தொறும் மரீ இய திணை நிலைப் பெயரே"
விளக்கம்:ஒவ்வொரு திணையிலும் வாழ்கிற மக்களின் பெயர், அவர்கள் வாழும் நில அடிப்படையிலும் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் என இரு நிலையில் பொருந்தி வரும்
நூற்பா 23 "ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே"
விளக்கம்: முல்லைத் திணையில் மேய்த்தல் தொழில் ஈடுபடும் ஆடவர் ஆயர் எனவும் வேட்டையாடுபவர் வேட்டுவர் எனவும் குறிக்கப்படுவர் ஆட்சி பொருப்பிற்கு உரியவரும் உண்டு
நூற்பா 24 "ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை ஆனா வகைய திணை நிலைப் பெயரே"
விளக்கம்: முல்லை நிலத்தில் காணப்படும் திணை நிலப் பெயரை போன்றே குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் முதலிய திணை நிலைப் பெயர்களும் அந்தந்த நிலம் சார்ந்தே இருக்கும் இளம்பூரணர் உரைப்படியான பெயர் பட்டியல் இதோ கீழே: 1. முல்லை - ஆண் - ஆயர், வேட்டுவர் பெண் - ஆயச்சியர், வேட்டுவித்தியர் தலைவன் - குறும்பொறை நாடன் 2. கூறிஞ்சி - ஆடவர் - குறவர், கானவர் - பெண் - குறத்தியர், கானத்தியர் - தலைவன் - சிலம்பன், பொருப்பன், வெற்பன் 3. பாலை - ஆடவர் - எயினர், மறவர் பெண் - எயிற்றியர், மறத்தியர் - தலைவன் - காளை, மீளி, விடலை 4. மருதம் - ஆண் - உழவர், களமர் - பெண் - உழத்தியர், களத்தியர் - தலைவன் - ஊரன், மகிழ்நன் 5. நெய்தல் - ஆண் - நுளையர், பரதவர் - பெண் - நுளைச்சியர், பரத்தியர் - தலைவன் - கொண்கன், சேர்ப்பன், துறைவன்
நூற்பா 25 "அடியோர் மருங்கினும் வினைவலர் பாங்கினும் கடி வரை இல புறத்து என்மனார் புலவர்"
விளக்கம்: பிறரிடம் அடிமைத் தொழில் செய்வோரும் பிறர் ஏவிய தொழில் செய்வோரும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனும் ஐந்திணை ஒழுக்கத்திற்கு உரியவர் அல்லர் கைக்கிளை, பெருந் திணைக்கு உரியவராக கருதப்படுவர்
நூற்பா 26 "ஏவல் மரபின் ஏனையோரும் உரியர் ஆகிய நிலைமை அவரும் அன்னர்"
விளக்கம்: ஏவல் தொழில் செய்வோர் மட்டுமல்லாது ஏவும் வலிமை படைத்தோரில் அக ஒழுக்கங்களில் ஒழுகாதவர்களும் அறம், பொருள் இன்பம் போன்றவற்றில் விருப்பம் உடையவரும் கைக்கிளை, பெருந் திணைக்கு உரியவராகவே கருதப் படுவர்
நூற்பா 27 "ஓதல் பகையே தூது இவை பிரிவே"
விளக்கம்: பிரிவு என்பது கற்றலின் மொருட்டும், பகையின் பொருட்டும், தூதின் பொருட்டும் நிகழ்வதாக அமையும்
நூற்பா 28 "அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன"
விளக்கம்: மூவகை பிரிவுகளில் கற்பதற்காகவும், தூதிற்காகவும் ஏற்படும் பிரிவு உயர்ந்தோரென மதிக்க தக்கவர்களிடம் நிகழும்
நூற்பா 29 "தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே"
விளக்கம்: வேந்தன் போரின் பொருட்டு தானே பிரிந்து ணெல்வதும், அவனுடன் ஏனைய வீரர்கள் பிரிந்து செல்வதும் பிரிவென அமையும்
நூற்பா 30 "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலா சொல்லிய முறையான் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டின் இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே"
விளக்கம்: மூவகை பிரிவுகள் அன்றி தெய்வ வழிபாட்டின் காரணமாகவும், அறநெறி பொருட்டாகவும், பொருள் ஈட்ட செல்லும் போதும் பிரிவு நிகழும்
இன்று இத்துடன் நிறைவு மீண்டும் நாளை தொடரும் ============================ மா கோமகன் (பேச்சு) 05:56, 6 மார்ச் 2021 (UTC)
பொருளதிகாரம் - 4
தொகுபகுதி - 4
- தொல்காப்பியம்* மொருளதிகாரம்
அகத்திணையியலின் இன்றைய தொடர்ச்சி
நூற்பா 31 "மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே"
விளக்கம்:தெய்வ வழிபாட்டிற்காக பிரியும் பிரிவு என்பது அந்தணரெ, அரசர், வணிகர், வேளாளர் எனும் நான்கு வகையினருக்கு உரிந்தாகும்
நூற்பா 32 "மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப"
விளக்கம்:நாட்டைப் மாதுகாக்கும் மன்னருக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்பவர்கள் வணிகரும் வேளாளரும் ஆவார்கள் அவர்களும் பிரிவுக்கு உரியவர்கள்
நூற்பா 33 "உயர்ந்தோர்க்கு உரிய ஒத்தினான"
விளக்கம்:பின்னோராக குறிக்கப்படும் இருவகையினரிடம் வணிகர்கள் கல்வி கற்பதற்கான பிரிவு உரியதாகும்
நூற்பா 34 "வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரிஇய" ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே"
விளக்கம்: நாட்டை காப்பதற்கான கடமையில் வேந்தனை தவிர்த்து தூது போதல் போன்றவற்றை உரியோர் வணிகரும் வேளாளரும் ஆவர்
நூற்பா 35 " மொருள் வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே"
விளக்கம்: பொருள் தேடுவதற்காக ஏற்படும் பிரிவு என்பது வணிகர் வேளாளர் ஆகியோருக்கும் உரியதாகும்
நூற்பா 36 "உயர்ந்தோர் பொருள் வயின் ஒழுக்கத்தான"
விளக்கம்: நால்வகைப் பிரிவினரில் அந்தணர் பொருள் தேடுவதற்கு பிரியும் போது அவர்களின் ஒழுகலாறுகளைத் தவிர்க்க கூடாது
நூற்பா 37 "முந்நீர் வழக்கம் மகடூஉ வொடு இல்லை"
விளக்கம்: மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் என முந்நீர் வழி உருவாகிய கடலை கடந்து செல்லும் வழக்கம் தலைவிக்கு இல்லை
நூற்பா 38 "எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மையான"
விளக்கம்:தலைவனுடன் கொண்டுள்ள காதலுக்கு எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தலைவி மடல் ஏறுதல் சிறந்த நெறியாக கருதப்படுவதில்லை
நூற்பா 39 தலைவி தன் இல்லத்தில் உள்ளோரைப் மிரிந்து தலைவனுடன் செல்ல நற்றாய் மன நிலை குறித்தது இது
"தன்னும் அவனும் அவளும் சுட்டி மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்"
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி தோழி தேயத்தும கண்டோர் பாங்கினும் போகிய தேயத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ் வழி உரிய"
விளக்கம்: தன்னையும் உடன்போக்கு சென்ற தலைவனையும் தலைவியையும் பற்றி நற்றாய் பேசுவாள். அவர்கள் பற்றிய செய்தி அறிய சகுனம் பார்த்தல், நற்சொல் கேட்டல், குறிபார்த்தல் முதலிய வற்றில் ஈடுபடுவாள். மற்றவர்கள் பேசும் சொற்களை தன்வாய் சொல்லாக கருதி நன்மை தீமைகளை ஆராய்வாள். தலைவி தன் இல்லத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் அவளடையும் இன்னல்களையும் இனி அவளுக்கு அமையபோகும் வாழ்க்கையும் என எல்லாவற்றையும் எண்ணி தோழியிடமும் தேடிப் போகும் காண்போரிடமும் புலம்புவாள்.
நூற்பா 40 "ஏமப் பேரூர் சேரியும் சுரத்தும் தாமே செல்லும் தாயரும் உளரே"
விளக்கம்: பாதுகாப்பு மிக்க பேரூரின் சேரி இடத்தும் பாலை நிலத்திலும் தலைவனுடன் போன தலைவியை தாயர் தேடிச் செல்வார்கள் தாயர் - பலர்பால் சொல் என்பதால் நற்றாய், செவிலித் தாய் என கொள்க
இன்று இத்துடன் நிறைவடைய மீண்டும் நாளை கானலாம் ============================ மா கோமகன் (பேச்சு) 17:35, 8 மார்ச் 2021 (UTC)