முனைவர் ஆ.மணி
முனைவர் ஆ. மணி, தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆவார். தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் கெங்குவார்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் கா. ஆறுமுகம், ஆ. தேவகி ஆகியோராவர். [ஆ. மணி]
கல்வி வளமை
தொகுதொடக்கக் கல்வி : கெங்குவார்பட்டி அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை.
உயர்நிலைக் கல்வி : கெங்குவார்பட்டிக்கு அருகில் உள்ள கெ. கல்லுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வி.
மேனிலைக் கல்வி : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசினர் மேனிலைப் பள்ளியில் மேனிலைக் கல்வி.
இளநிலைப் பட்டக் கல்வி : திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இளநிலை விலக்கியலில் பட்டக் கல்வி.
முதிநிலைப் பட்டக் கல்வி : மதுரை யாதவர் இருபாலர் கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பட்டக் கல்வி கற்றார். அத்தோடு அக்கல்லூரியில் பகுதிநேரமாக நடத்தப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனை சான்றிதழ் பெற்றார்.
முனைவர்ப் பட்ட ஆய்வு : மதுரை யாதவர் இருபாலர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் முனைவர் இ.கி.இராமசாமி அவர்களின் வழிகாட்டலில் குறுந்தொகை உரைநெறிகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டம் பெற்றார்.
பணித்தகுதி : பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( U.G.C. ) நடத்திய விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (1998 திசம்பர் ).
இதழியல் பணிகள்
தொகு திருச்சி, ஜமால் முகமது கல்லூரி விடுதி மாணவர் கையெழுத்து இதழாகிய “ குயிலோசை ”யின் பொறுப்பாசிரியர் (1995 - 1996).
மதுரை யாதவர் கல்லூரி ஆண்டு மலர்க் குழுவில் மாணவ உறுப்பினர் (1996 - 1997 ).
மதுரை யாதவர் கல்லூரியின் மாணவர் கையெழுத்து இதழாகிய “ இளந்தென்றல் ” இன் முதற்பொறுப்பாசிரியர் (1997 - 1998 ).
மதுரை தினமணி நாளிதழில் செய்தி சேகரித்தல்; செய்தி எழுதுதல் பற்றிய 10 நாள் (23.03.1998 – 06.04.1998) களப்பணிப் பயிற்சி பெற்றிருத்தல்.
பரிசுகள்
தொகு• எம்.ஏ. தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பரிசு (1996 - 1997).
• எம்.ஏ. தமிழ் தேர்வில் முதல் மதிப்பெண் (1996 – 1997).
• நன்னடத்தைப் பரிசு (1996 - 1997).
• மாண்கவிஞர் பரிசு (1996 – 1997).
• பகுத்தறிவுச் சிந்தனைச் சான்றிதழ்த் தேர்வில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் (வெள்ளிப் பதக்கம்) (1996 – 1997).
• மதுரை பல்கலைக் கழக அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டி : மூன்றாம் பரிசு (1996 – 1997).
• திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம், திருநெல்வேலி தமிழக அளவில் நடைபெற்ற இரா.பி. சேதுப்பிள்ளை நூற்றாண்டு விழாக் கட்டுரைப் போட்டி : மூன்றாம் பரிசு (1997).
• எம்.ஏ. (தமிழ்) தேர்வில் உயர்மதிப்பெண் (1997 - 1998).
• மதுரை பல்கலைக் கழக அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டி : மூன்றாம் பரிசு (1999).
• இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை தொல்காப்பியர் விருது (2011).
நூல் வெளியீடுகள்
தொகு• குறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.
• காலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. (ISBN 978 – 81 – 909171 – 0 – 0).
• செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. (ISBN 978 – 81 – 910738 – 0 – 5).
• குறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. (ISBN 978 – 81 – 910738 – 1 – 2).
• ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. (ISBN 978 – 81 – 910738 – 3 – 6).
பதிப்பித்த நூல்கள்
தொகு• பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. (ISBN 978 – 81 – 910738 – 5 – 0).
• பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. (ISBN 978 – 81 – 910738 – 6 – 7).
ஆய்வுத் திட்டப் பணிகள்
தொகுசென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் “ பழந்தமிழ் இலக்கண இலக்கிய உரைகளில் குறுந்தொகை” என்னும் பொருண்மையில் குறுகிய கால ஆய்வுதிட்டப்பணி (2011 – 2012) மேற்கொண்டுள்ளார்.
ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய பயிலரங்கு, கருத்தரங்குகள்
தொகு• செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் தமிச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் தொடர்பான பத்து நாள் பயிலரங்கு ஒன்றை (12.12.12 – 21.12.12) புதுச்சேரி உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் நிகழ்த்தியுள்ளார்.
• பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு நிதியுடன் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் நடத்திய பல்துறைநோக்கில் தொல்காப்பியம் என்ற இருநாள் (31.01.13, 01.02.13) தேசியக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர்.
• செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் பழந்தமிழ் இலக்கண இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு (25.02.13) ஒன்றை நடத்தியுள்ளார்.
ஆய்வுரை வெளியீடுகள்
தொகுசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நிகழ்த்தபடுகின்ற பயிலரங்குகள், கருத்தரங்குகள், பிற கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், ஆய்விதழ்கள் என்றினைய நிலைகளில் 2012 வரை தொண்ணூறு ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளார்.
இவருடைய மேற்பார்வையில் இவருடைய பிறந்த ஊரான கெங்குவார்பட்டியிலும், புதுச்சேரியிலும் தமிழன்னை ஆய்வக நூலகம் இயங்கிவருகின்றது.
இந்திய அரசின் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23.05.05 முதல் புதுச்சேரி அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.