வாருங்கள், முனைவர் ஆ.மணி!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து எழுதும் கூட்டு முயற்சி கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை ஆலமரத்தடியில் தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்.


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். புதிய கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.



அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:37, 20 மார்ச் 2013 (UTC)

விக்கி கட்டுரை எழுதும்போது பின்பற்றவேண்டிய சில நெறிமுறைகள்

தொகு

தமிழ் விக்கியில் பங்களிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சியும் நன்றியும். விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத சில நெறிமுறைகள் இருக்கின்றன, தயவுசெய்து அவற்றைப் பின்பற்றவும். இந்த செய்திக்கு மேலேயுள்ள வரவேற்புச் செய்திப்பெட்டியைப் படிக்கவும், அதிலுள்ள இணைப்புகளையும் படிக்கவும். நீங்கள் ஆரம்பித்தக் கட்டுரை முன்பே செம்புலப்பெயல்நீரார் என்கிறப் பெயரில் உள்ளது, அதை நீங்கள் மேம்படுத்தி உதவலாம். மேலும், நீங்கள் எழுதிப் பயிற்சி செய்வதானால் உங்கள் மணல் தொட்டியைப் பயன்படுத்தவும். கட்டுரைப்பக்கத்தில் உங்கள் கையெழுத்தை இடவேண்டாம். மேலும், ஏதேனும் உதவி/சந்தேகம் இருந்தால் கேட்கவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:58, 20 மார்ச் 2013 (UTC)

இரண்டையும் இணைத்துவிட்டேன். செம்புலப்பெயல்நீரார் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. மேம்படுத்தி உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு)

முதல் கட்டுரை

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், முனைவர் ஆ.மணி!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:24, 24 மார்ச் 2013 (UTC)

படங்களைச் சேர்ப்பது எப்படி?

தொகு

கட்டுரைக்குரிய படங்கள், பயனர் படம் இவற்றை இணைப்பது எப்படி? தெரிவிக்க வேண்டுகின்றேன்.

விக்கிப்பீடியா:உதவி, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கங்களைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 01:48, 25 மார்ச் 2013 (UTC)

உங்களைப் பற்றியத் தகவல்கள்

தொகு

வணக்கம்,

தங்களைப் பற்றியத் தகவல்களை தனியே கட்டுரை உருவாக்காது தங்கள் பயனர் பக்கத்தில் - பயனர்:முனைவர் ஆ.மணி தருமாறு வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:17, 17 மே 2013 (UTC)Reply