அஸ்ஸலாமு அலைக்கும் (السلام عليكم)

பெயர்: மொஹமட்

இருப்பிடம்: கொழும்பு

விக்கி ஈடுபாடுகள்

தொகு
  • உரை திருத்தம், துப்புரவு, தளப் பராமரிப்பு, புதுப்பயனர் வரவேற்பு, எரிதக் கண்காணிப்பு.
  • கொள்கைப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள் உருவாக்கம்.
  • பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்புகள், வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தல்.
  • கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம்.

எனது விக்கி ஈடுபாடுகளாக மேலே உள்ளதை நான் செய்ய விருப்பம். விக்கிபீடியா கட்டுரைகள் அதிகமானவை முழுமையானவை அல்ல. நிறைய தகவல் பிழைகள் உள்ளன. சரியான தகவல் இல்லாத கட்டுரைகள் நிறைய உள்ளன. திருத்தல் பணிகள் நிறைய உள்ளன. நான் அதைத்தான் முதலில் செய்ய உள்ளேன்.

புதிசா எழுதுதல்

தொகு

எழுதுதல் என்பது ஆடுவதில் ஆர்வம், பாடுவதில் ஆர்வம், நடிப்பதில் ஆர்வம் மாதிரி ஒரு ஆர்வமுள்ள விஷயமாகும். சொல்லப்போனால் எழுதுதல் என்பதும் ஒரு கலைதான். எழுதுபவர்களும் கலைஞர்கள் தான். எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. மற்ற கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் மாதிரி எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எழுதுவார்கள். எழுதுபவர்கள் சொல்லிக்கொள்வது மாதிரி தமிழ் பற்று என்பதெல்லாம் பொய் எனக்கு தெரிய எழுதுவதில் ஆர்வம் உள்ள நண்பர்கள், சிங்களம் படித்ததால் சிங்களத்தில் எழுதுகிறார்கள். தமிழ் படித்ததால் தமிழில் எழுதுகிறார்கள். எழுதும் கலையார்வம் உள்ளவர்கள் எந்த மொழியில் படித்திருக்கிறார்களோ அந்த மொழியில் எழுதுகிறார்கள்.

தங்கள் கலையார்வத்திற்கு எழுதுபவர்கள் தமிழ் பற்று, சிங்களப் பற்று, அராபி பற்று என்று கூறிக்கொள்வதில் உண்மை இல்லை.

எழுதுபவர்கள் தான் அறிவாளிகள் என்று சிலர் நினைக்கிறார்கள். இது மிகப் பெரிய பிழை. எழுதுவதில் ஆர்வம் இல்லாத எத்தனை அறிவாளிகள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை அறிவாளிகள் இல்லை என்று சொல்லேலாது. அவர்களுக்கு எழுதும் கலையார்வம் இல்லை அவ்வளவு தான். அதேமாதிரி எழுதுபவரில் அறிவாளிகள் இருக்கலாம். ஆனால் எழுதுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் இல்லை.

விக்கி பங்களிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மொஹமட்&oldid=739843" இலிருந்து மீள்விக்கப்பட்டது