ரஞ்சனி நாராயணன்
Joined 2 சூலை 2014
எனது பெயர் ரஞ்சனி நாராயணன். வயது 61. எழுதுவதும், படிப்பதும் மிகவும் பிடித்த விஷயங்கள். 2000 மாவது ஆண்டிலிருந்துதான் எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன்வரை புத்தகங்கள் படிப்பதுடன் சரி. எனது மகளின் திருமணம் என்னை எழுத்தாளியாக்கியது எனலாம். வேறொரு சம்பிரதாயத்தைச் சேர்ந்தவருடன் நடந்த அவளது திருமணத்தின் போது பல மாறுபட்ட அனுபவங்கள். அவற்றை வைத்துத்தான் எனது முதல் கதையை 'மங்கையர் மலர்' புத்தகத்தில்2000 மாவது ஆண்டு அத்தையும் ராகி முத்தையும் என்ற தலைப்பில் எழுதினேன். முதல் கதை வெளியாகவே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
எனது முதன்மை வலைத்தளம்: ரஞ்சனி நாராயணன்
இரண்டாவது வலைத்தளம் ப்ளாக்ஸ்பாட்டில் தொடங்கினேன். பெயர் 'திருவரங்கத்திலிருந்து'
மூன்றாவது வலைத்தளம் 'புள்ளிக்கோலம்'
விக்கிப்பீடியாவில் முதல் கட்டுரை எழுதியுள்ளேன். இனி தொடர்ந்து எழுத விருப்பம்.