ரஞ்சனி நாராயணன்
வாருங்கள்!
வாருங்கள், ரஞ்சனி நாராயணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
புதிய கட்டுரை
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், ரஞ்சனி நாராயணன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:53, 28 செப்டம்பர் 2014 (UTC)
அன்புள்ள திரு தமிழ்க்குரிசில் அவர்களுக்கு முதலில் எனது வணக்கம்.
விக்கிபீடியாவில் ஒரு கட்டுரையை எப்படி இணைப்பது என்று இன்று தெரிந்து கொண்டேன். எனக்கு சில சந்தேகங்கள். தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
1. எனது கட்டுரை வெளிவந்துள்ள பக்கத்தில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்
எப்படி நடைகையேட்டில் தொகுப்பது? விக்கிப்படுத்துவது என்றால் என்ன?
இந்தக் கட்டுரையை எனது வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாமா?
2. எனது வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகளை (பிற பத்திரிகைகளில் வெளிவராதவற்றை) இங்கு இணைக்கலாமா? உதாரணத்திற்கு மைசூரு மகராஜா பற்றி ஒரு கட்டுரை எனது வலைத்தளத்தில் இருக்கிறது. மைசூரு தசரா பற்றிய கட்டுரையில் இதற்கான இணைப்பைக் கொடுக்கலாமா?
3. உங்கள் பேச்சுப் பக்கத்தில் எப்படி எனது கேள்விகளைக் கேட்பது? உங்கள் பேச்சுப் பக்கத்தில் தொகு என்றிருக்கிறதே அதை அழுத்தினால் ஒரு பக்கம் திறக்கிறது. அதில் எனது கேள்விகளை எழுதலாமா?
விக்கிப்பீடியாவில் உங்களது பங்களிப்பு மிக அதிகம் என்று தெரிந்துகொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
நன்றியுடன்,
ரஞ்சனி
- உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கம் தருகிறேன். தமிழ்குரிசிலும் தருவார்:)
- எப்படி நடைகையேட்டில் தொகுப்பது? விக்கிப்படுத்துவது என்றால் என்ன? நடைக் கையேடு இங்குள்ளது.
- நீங்கள் எழுதிய முதல் கட்டுரையில் முதன்மையான பிறழ்வு முன்னிலையில் (first person) இருப்பது. காட்டு: நவராத்திரி என்றால் இந்தியாவில் இரண்டு நிகழ்வுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. எதிர்பார்ப்பு: இந்தியாவில் நவராத்திரி விழாக்களில் கொல்கத்தாவின் காளி பூசையும் மைசூரின் தசராவும் இரு முதன்மையான நிகழ்வுகள். கலைக்களஞ்சிய நடை என்பது impersonalஆக இருத்தல் அவசியம். பள்ளிப் பாடப்புத்தகம் போன்ற நடை. வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் இருப்பது போன்றதல்ல.
- விக்கிப்பீடியாவின் சிறப்பம்சமே ஒரு கட்டுரையின் உள்ளே தொடர்புடைய மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பு தருவதாகும். மேலும் இது எவர் வேண்டுமானாலும் எழுதும் தளமாகையால், சான்றுகள் கொடுப்பது மிகத் தேவையானது. சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்பது போன்ற மிகவும் பொதுவான விடயங்களைத் தவிர மற்றவற்றிற்கு பிற நம்பத்தக்க ஊடகங்களிலிருந்து சான்று தேவை. விக்கிப்படுத்துவது என்பது இவ்வாறு உள்ளிணைப்புகளை கொடுத்தல், சான்றுகளை இணைத்தல், படிமங்களை இணைத்தல் போன்ற செயல்களாகும்.
- இந்தக் கட்டுரையை எனது வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாமா? விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் Creative Commons Attribution/Share-Alike License 3.0 மற்றும் GFDL பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டவை. விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டு நீங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ளலாம். (குறிப்பு:இங்கு உங்கள் ஆக்கங்கள் உங்களுக்கு சொந்தமானவை அல்ல. உரிம இழப்பிற்கு ஒப்புக்கொண்டுதான் இங்கு பங்களிக்கிறீர்கள். எனவே உங்கள் ஆக்கங்கள் மற்றவர்களால் மாற்றவோ,நீக்கவோ,சேர்க்கவோ படலாம் :) என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்)
- எனது வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகளை (பிற பத்திரிகைகளில் வெளிவராதவற்றை) இங்கு இணைக்கலாமா? உதாரணத்திற்கு மைசூரு மகராஜா பற்றி ஒரு கட்டுரை எனது வலைத்தளத்தில் இருக்கிறது. மைசூரு தசரா பற்றிய கட்டுரையில் இதற்கான இணைப்பைக் கொடுக்கலாமா?
- பொதுவாக வலைத்தள இணைப்புகள் உங்கள் தளத்திற்கான விளம்பரமாக கருதப்படக்கூடிய தீவாய்ப்பு உள்ளது. மிகவும் அரிதான தகவல்களை அரிதாக இணைக்கலாம்.
- 3. உங்கள் பேச்சுப் பக்கத்தில் எப்படி எனது கேள்விகளைக் கேட்பது? உங்கள் பேச்சுப் பக்கத்தில் தொகு என்றிருக்கிறதே அதை அழுத்தினால் ஒரு பக்கம் திறக்கிறது. அதில் எனது கேள்விகளை எழுதலாமா? ஆம்.தொகு என்று அழுத்தானால் இப்போதுள்ள பேச்சுப் பக்கம் திறக்கும். அங்கு பக்கத்தின் இறுதியில் (முதலில் அல்ல) உங்கள் கருத்துக்களை உபதலைப்பிட்டு இடுவது வழக்கமான ஒன்று.
- இறுதியாக எந்தப் பேச்சுப்பக்கதிலும் --~~~~ என்ற குறியிட்டு முடித்தால் உங்கள் கையொப்பம் இருக்கும். கட்டுரைப்பக்கங்களில் கையொப்பம் இடாதீர்கள்.
--மணியன் (பேச்சு) 12:39, 28 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம் திரு மணியன் அவர்களுக்கு.
உங்களது விரிவான பதில் பல ஐயங்களுக்கு விடை கொடுத்துள்ளது. பலபல முறைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நான் எழுதும் கட்டுரைகளுக்கு விஷயங்கள் சேகரித்துள்ளேன். ஆனாலும் கட்டுரைகளின் நடையை கவனிக்கத் தவறிவிட்டேன். இனி நீங்கள் சொன்னது போல எழுதுகிறேன். எனது முதல் கட்டுரையையே இப்போது திருத்தவேண்டும்.
நன்றி, நன்றி, நன்றி! --ரஞ்சனி நாராயணன் (பேச்சு) 14:49, 28 செப்டம்பர் 2014 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுதமிழ் விக்கிக்கு தங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் கிடைத்தது மகிழ்ச்சி...... தொடர்ந்தும் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். உதவிகள் ஏதும் தேவை எனில் இங்கோ அல்லது என் பேச்சுப்பைக்கத்திலோ கேளுங்கள். உதவ காத்திருக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:48, 28 செப்டம்பர் 2014 (UTC)
அன்புள்ள திரு ஆதவன் அவர்களுக்கு வணக்கம்.
உங்களது நல்வரவுக்கு எனது மனமார்ந்த நன்றி.
நிறைய உதவிகள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். நிச்சயம் கேட்கிறேன். இப்போதுதான் மெதுமெதுவே ஒவ்வொன்றாகக் கற்று வருகிறேன்.
அன்புடன், ரஞ்சனி நாராயணன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.