பயனர்:Chella93/மணல்தொட்டி
இப்பயனர் பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Chella93/மணல்தொட்டி | |
---|---|
படிமம்:Aazhiyaal IT.jpg | |
பிறப்பு | மதுபாஷினி சூன் 16, 1968 திருகோணமலை, இலங்கை |
தொழில் | 1992-1997 English Lecturer (Vavuniya Campus Jaffna Uni) 1999-2019 Software Developer/Contracts Analyst/ Senior IT Contracts Administrator |
தேசியம் | அவுஸ்திரேலியா |
கல்வி | BA English Lit (smgaw), MA English(unsw) , PGDip IT (unsw) |
காலம் | 1995–இன்று |
வகை | படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசனம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | உரத்துப்பேச(2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017) |
இணையதளம் | |
http://aazhiyaal.net/ |
ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி ஈழத்தின் குறிப்பிடத்தக்க [1] [2] பெண் கவிஞர்களில் ஒருவர். [3] [4]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார். அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஆத்திரேலியா தலைநகர் கான்பராவில் வசித்து வருகிறார்.
எழுத்துத் துறை
தொகுதொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் மூன்று கவிதைத் தொகுப்புக்களும் ஓர் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது நூல்கள்
தொகு- உரத்துப்பேச, கவிதைத் தொகுப்பு
- துவிதம் , கவிதைத் தொகுப்பு
- கருநாவு, கவிதைத் தொகுப்பு
- பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்பு கவிதைகள்)
வெளி இணைப்புகள்
தொகு- ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்,க.பஞ்சாங்கம் (காக்கைச் சிறகினிலே 2011)
- திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல், அதீதன்
- Signals from the Navel,Translated by Lakshmi Holmström (Mirrored Images - An Anthology of Sri Lankan Poetry 2013 )
- வலியும் வலியறிதலும் விரிந்தவெளி,யாழ்மதி (அணங்கு 2006)
- உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்,அன்பாதவன் (கீற்று)
- கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்,ஜெயமோகன்
- The Mother and the Goddess of Night,Translated by Lakshmi Holmström (Words Without Border- April 2015 )