பயனர்:Howshalya Sundaram/மணல்தொட்டி

சிந்துவின் ஏழு ராணிகள் என்பது ஏழு பெண்களின் கதாபாத்திரத்தை கொண்டது.இதனை சிறப்புமிக்க சிந்திய கவிஞரான ஷா அப்துல் லதீப் பீட்டாய்[1] in his book Shah Jo Risalo.[2] என்பவர் தனது ஷா ஜோ ரிசலோ என்னும் கவிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் .அந்த பெண்கள் மருய் ,மூமல் ,சாடியா ,சசூய் ,நூரி ,சுஹ்னி ,லிலத் மற்றும் சோரத் ஆவர் .கவிஞர் தனது கவிதையின் கருத்தை தெரிவிக்க வரலாற்றில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஏழு பெண்களின் [3] சிறப்பை ,சிந்துவின் வரலாற்றாக அவர்களின் துணிச்சல்,தைரியம்,அர்ப்பணிப்பு ,விசுவாசம்,ஆர்வம் மற்றும் பாத்திர வலிமையை கூறுகிறார் .

ஷா அப்துல் லதீப் பீட்டாய்
شاھ عبداللطيف ڀٽائي
உமர் என்னும் கொடுங்கோல் உடைய அரசன் கூறுவது போல , மருயின் கதாபாத்திரமும் நிலத்தின் மீதான அன்பு ,அந்த நிலத்தில் வாழும் மக்கள் மற்றும் அவர்களது மரபுகள் மீதான அவளது அர்ப்பணிப்பை சார்ந்தது ஆகும்.[4] மூமலின் கதாபாத்திரமானது ஒரு உணர்ச்சிமிக்க ஆத்மாவாக சித்தரிக்க பட்டு , தன் காதலனான ரானோ மீதான அன்பு மற்றும் பிரிவு , நிராகரிப்பு , ஆகியவற்றால் அவதிப்பட்டுக்கொண்டு இருப்பதாகும்.[5] சாடியா அன்பின் மறு உருவமாக திகழ்ந்தாள் . அவள் சர்மத்தை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறாள் . அவர்கள் பேசி கொள்ள கூட மாட்டார்கள் , ஆனாலும் அவள் அவனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தால் . இவ்வாறு அவர்களது காதல் அமைதியான வழியில் தொடங்கியது .சாடியா - சர்மத் ,இவர்களின் காதல் கதையானது அவ்வளவு பிரபலம் மிக்கது அல்ல . எனினும் பழைய கால புத்தகங்களில் இவர்களுது காதல் கதை எழுதப்பட்டுள்ளது . சாடியா பலூச்சி பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர் என்பதாலும் , சர்மத் பஞ்சாப் ராஜ்புதை சார்ந்தவர் என்பதாலும் , இவர்களது காதல் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் என்னும் வேறுபாடு அடிப்படையில் பிரிவை சந்திக்கிறது. சர்மத் , தற்செயலாக ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்று மூன்று நபரில் இருவரை கொலைச்செய்தார் . மீதமுள்ள அந்த ஒருவர் சர்மத்தை கொலை செய்து விட்டனர். [6]  சசூய் என்பவர் அச்சுறுத்தல் மிக்க பெண்மணி ,  சசூய்  தன் காதலனான புன்ஹூனை கண்டுபிடிப்பதற்காக பலவீனமான மலைப்பாதைகளில் பயணத்தை மேற்கொள்கிறார்.[7]நூரி ஒரு மீனவ பெண்ணாக இருப்பினும், அரசர் தமச்சியை மயக்கி சிந்தி இலக்கியத்தில் மூமல் மற்றும் சுஹ்னி போன்று காதல் கதாபாத்திரங்களில் இடம்பெறுகிறார்.[8] சுஹ்னி மிக தைரியமான பெண் , அவள் தன் காதலனான மெஹரை சந்திப்பதற்காக தினமும் சிந்து நதியின் அதிவேக அலைகளின் அருகே நின்று தூரத்தில் இருந்து பார்த்துவந்தாள் . அப்படி ஒரு இரவு  சந்திக்க சென்றிருந்த பொழுது அலைகளுக்கு பலியாகி இறந்துபோனாள்.[9] லீலன் தனது கணவனான, அரசர் சனேசரை விலையுயர்ந்த கழுத்துமாலைக்காக இழந்து , அவளது அந்தஸ்தையும் , தன்மையையும் மீட்டெடுக்க தாங்கமுடியாத பிரிவிற்கு உள்ளாகிறாள்.[10] சோரத் அன்பு மனம் படைத்தவள் . அவள் தன் காதலன் மீது அன்பும் அக்கறையும் மிகுதியாய் கொண்டவள் .[11]

ஷா அப்துல் லதீப் , தனது கவிதை புத்தகமான, கஞ்ச் , [12] பொதுவாக ஷா ஜோ ரிசலோ என அழைக்கப்படும் புத்தகமானது , ஒரு விதத்தில் தன் கவிதையின், தன் கருத்தை உலகுக்கு தெரிவிக்க உதவுவதாக கூறுகிறார் .அவரது கவிதைகளுக்கு பின்னால் பல நோக்கங்கள் இருந்தாலும் நாட்டின் ஓரமாய் ஒதுக்க பட்ட பெண்களை முன்னிலை படுத்தி கவிதையை அமைப்பதே அவரது முக்கிய நோக்கமாகும் .அதன்படி அவர் அந்த ஏழு பெண்களை(சிந்தி மொழி: ‎) or Seven Queens அல்லது (சிந்தி :) அல்லது சிந்தி நாட்டுப்புற கதைகளின் ராணிகளை தனது கதாநாயகிகளாக தேர்ந்தெடுத்தார் .இந்த துயரமான காதல் கதைகளில் ஏழு ராணிகளாக ,உமர் மறுய் ,சாடிய சர்மத் ,மோமல் ரானோ ,சோஹ்னி மெஹர் ,லீலன் சனேசர் ,நூரி ஜாம் தமாச்சி ,சஸ்சுய் புன்ஹுன் மற்றும் சோரத் ராய் தியாச் ஆகியோர் இடம்பெற்றன. இந்த வீர பெண்களின் காதல் கதையானது பாகிஸ்தானில் உள்ள சிறப்பு மிக்க இலக்கியங்களான ,( சிந்தி ,உருது ,பலோச்சி ,பாஸ்டோ ,சிராய்கி ,பஞ்சாபி )என்பதில் எழுதப்பட்டுள்ளது.குறிப்பாக இந்தியாவில் உள்ள சிந்தி இலக்கியத்தில் மூமல் மற்றும் சுஹ்னி ஆகிய இருவரும் முக்கிய இடத்தை பெற்றுள்ளனர்.இந்த லத்தீபின் கவிதைகள் மூலம் பெண்களின் பங்கு ஆண்களின் பங்கை சகாக்களாக ஆதிக்கம் கொண்டுள்ளதாக தோன்றும்.லத்தீபின் கவிதைகளை பகுப்பாய்வு செய்தால் ,உமரின் கதாபாத்திரமானது ,குறைந்த வகையில் அர்பணிக்கப்பட்டு , சிந்தின் தென்கிழக்கு பகுதியில் உமர் மன்னரால் கடத்தல் செய்யப்பட்ட மறுய் அனுபவிக்க பட்ட சிரமங்களையே கதையின் முக்கிய கருத்தாக இடம்பெறுகிறது.மூமல் ரானோவில் ,மூமலின் கதாபாத்திரத்தின் வலிமையானது ,ரானோ உட்பட அனைவரது கதாபாத்திரத்தையும் மூழ்கடித்துவிடும். அதேபோல் சசூய் புன்ஹுனிலும் , சசூய் தன்னை விட்டு சென்ற கணவனான புன்ஹுனை கண்டுபிடிப்பதற்க்காக பல போராட்டத்தை மேற்கொள்வதால் அவளது கதாபாத்திரமே வலிமை பெற்றதாகும்.நூரி ஜாம் தமாச்சி என்பது நூரி தன் சூழலிலிருந்து உருவாக்கிய காதல் கதையாகும். தமாச்சி என்பது நூரியின் நோக்கத்தை அறிய உதவும் மூலம் ஆகும்.நூரி ஜாம் தமாச்சி என்பது நூரி தன் சூழலிலிருந்து உருவாக்கிய காதல் கதையாகும். தமாச்சி என்பது நூரியின் நோக்கத்தை அறிய உதவும் மூலம் ஆகும்.சுஹ்னி மெஹர் கதையிலும்,சுஹ்னி தன் காதலனான மெஹரை சந்திக்க நினைக்கும்போது அவள் அடையும் கவலையையும் ,அவள் சந்தித்த பிரச்சனைகளையும் கூறுவதே இந்த கதையாகும்.லீலன் சானேசர் என்னும் கதையில் மீண்டும் லீலனே கதாநாயகனாக இடம் பெற்றுள்ளான். சோரத் ராய் தியாச், இந்த கதையானது மேல்கூறிய கதைகளை போலில்லாமல் , சோரத்தின் கதை சக்தி ஆதிக்கம் கொண்டதாகும்.

எனவே இந்த ஏழு வீர பெண்களான ஒவ்வருவரின் கதையும் ,பழைய இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் வாழும் மக்களின் பரிணாம வளர்ச்சியின் கலாச்சார சூழல் மற்றும் கலாச்சார பொருளுடன் தொடர்புடையது ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. Shah Abdul Latif Bhittai
  2. Shah Jo Risalo
  3. "Sindhi Folk Tales in English | Sindhi Sangat | Sindhi book | Sindhi Community". www.sindhisangat.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  4. Umar Marvi
  5. Momal Rano
  6. Sadia Sarmad
  7. Sassui Punhoon
  8. Noori Jam Tamachi
  9. Sohni Mehar
  10. Lilan Chanesar
  11. Sorath Rai Diyach
  12. Shah Jo Risalo

வகை : சிந்தி நாட்டுப்புறவியல் வகை : சிந்துவின் கலாச்சாரம் வகை : பாகிஸ்தான் நாட்டுப்புறவியல் *

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Howshalya_Sundaram/மணல்தொட்டி&oldid=3721672" இலிருந்து மீள்விக்கப்பட்டது