நான் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றேன். நான் [[[[[கல்வியலில்|கல்வியியல்]]]]] முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.நான் 2000 ஆம் ஆண்டு ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியேற்று அக்டோபர் 2016 ஆம் ஆண்டு முதுநிலை விரிவுரையாளராக பதவு உயர்வு பெற்றேன். நான் 25 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்,30 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்துள்ளேன்.ஆசிரியர் கல்வியில் முதலாம் ஆண்டு சமுதாயத்தில் ஆசிரியரும் கற்போரும் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு கட்டகங்களுக்கான மொழி பெயர்ப்பு பணிமனையிலும் முழுமைத் தர மேலாண்மைக் கட்டகத்தின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன்.நான் முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் என்ற பாடத்தை எடுத்து வருகிறேன். இது வரையில் 6000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கியுள்ளேன். பல்கலைக் கழக அளவில் ஆய்வியல் நிறைஞர் கல்வியியல் பாடத்தில் 3 ஆய்வு மாணவர்களை உருவாக்கியுள்ளேன். நான் கணினி அறிவியல் மற்றும் பயன்பாடுகள் பாடத்தில் முதுநிலை பட்டயச் சான்று முடித்துள்ளேன். எனது அன்றாட செயல்பாடுகள் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பாடம் நடத்துதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், கல்வியில் விரிவாக்கப் பணி ஆகியவை ஆகும். நான் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக 2010 ஆம் ஆண்டு கல்வியியல் செயல்திட்டத்தை முடித்துள்ளேன். கல்வியியல் மேலாண்மையில் எம்.பி.ஏ.பட்டம் பெற்றுள்ளேன். இதுவரையில் 6 க்கும் மேற்பட்ட [[செயல் ஆராய்ச்சிகளை]] முடித்துள்ளேன். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய 100 க்கும் மேற்பட்ட பயிற்சிகள், 20க்கும் மேற்பட்ட பணிப்பட்டறைகள், 10 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ளேன். எனது எதிர்காலத் திட்டம் கல்வியில் பங்களிப்புகளை கொடுப்பது, அனைவருக்கும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நூலகம் அமைத்தல், அரசு சாரா குழுக்களை ஏற்படுத்துதல் போன்றவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JAYARAJ_KMU&oldid=2392873" இலிருந்து மீள்விக்கப்பட்டது