பயனர்:Jagadeeswarann99/புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்கள்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த பக்கம் Jagadeeswarann99 (பேச்சு | பங்களிப்பு) ஆல் 18 மாதங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்கள் என்பது இந்திய அரசு தனித்தன்மை வாய்ந்த தமிழ்நாடு பொருள்களுக்கு கொடுத்துள்ள அங்கிகாரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவையாகும்.
அங்கீகாரம் பெறுதல்
தொகு1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவு சார் சொத்துரிமைக் கழகம் இக்குறியீட்டை வழங்குகிறது. சென்னை கிண்டியில் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் புவியியல் சார் குறியீடு வழங்கும் அலுவலகம் செயல்படுகிறது.
புவிசார் குறியீடு பெற அரசின் அமைச்சகமோ, தொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பொருளின் தனித்தன்மையை தெரிவிக்க புவிசார் குறியீடு பெறவேண்டிய பொருளுக்கான விவரக்குறிப்பு, விளக்கம், பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெறும் உற்பத்தி முறை, தனித்துவம், பொருளுக்கான சிறப்பு தன்மை, சிறப்பு மூலபொருட்கள், வேளாண் அல்லது இயற்கை பொருட்களாக இருந்தால் அது உற்பத்தியாகக் கூடிய காலநிலை விவரங்கள், மனிதர்கள் தயாரிக்கக்கூடிய கைவினைப் பொருட்களாக இருந்தால் அவர்களுடைய தனித்துவமான திறன், எந்த பகுதியில் உற்பத்தியாகிறது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முறையான ஆவணங்களை சமர்பிக்கிறார்கள்.
2005-2006
தொகுஏப்ரல் 2005- மார்ச் 2006 இல் சேலம் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிய சேலம் துணிகளுக்கான புவிசார் குறியீடு கிடைத்தது. இது தமிழ்நாடு மாநிலம் பெற்ற முதல் புவிசார் குறியீடு ஆகும். தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை கோரியிருந்த காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்களம், மதுரை சுங்குடி ஆகியவற்றுக்கும் கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்கள் & துணைக்கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியிருந்த அரவை இயந்திரத்திற்கும் என ஐந்து பொருட்களுக்கு இதே காலகட்டத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது.
பயன்கள்
தொகுபுவி சார் குறியீடு பெறுவதன் மூலம் விலை நிர்ணயிக்கும் உரிமை, தரமற்ற பொருள்களை தடுக்கும் உரிமை ஆகியவை கிடைக்கின்றன.
தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்
தொகு