கவியோவியத்தமிழன்

தொகு

கவியோவியத்தமிழன் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகேயுள்ள நைனான் குளத்துப்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் வி.பி.சுப்பிரமணி. அடிப்படையில் விவசாயத்தை பின்புலமாக கொண்ட இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவைகளை படைப்பதிலும் வாசிப்பதிலும் அதிக ஈடுபாடு உடையவர்.

இவரின் நூல்கள்: சாம்பலாடை - கவிதை (2003) ஊடாடும் வாழ்வு - சிறுகதை (2010) விதைத்த காடும் பசித்த பறவைகளும் -கவிதை (2017) மூங்கில் சுமக்கும் புல்லாங்குழல்கள் - ஹைக்கூ ( 2017 ) தலைவனை கண்டடையும் கலை - கவிதை, கட்டுரை ( 2017 ) நிலாச்சோறு- கட்டுரை (2019), நீ வரைந்த வாழ்க்கை - கவிதை (2019), பறவைகளின் அட்மின்- கவிதை (2021), இந்த மின்னல்கள் மறைவதற்கில்லை - கவிதை (2023)[1]

"ஊடாடும் வாழ்வு" சிறுகதைத் தொகுதி சேலம் எழுத்துக்களம் மற்றும் தாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளையின் மாநில அளவிலான சிறந்த சிறுகதைத் நூலுக்கான விருதை பெற்றது.

'மலம்' என்ற பெயரிலும் 'முள்' என்ற பெயரிலும் சிறு பத்திரிகைகள் நடத்தியுள்ளார். ○ ஓவியம் வரைவதோடு புத்தக பதிப்பு வேலைகளையும் செய்து வாழ்வை நகர்த்திவரும் கவியோவியத்தமிழன் சிறுகதைகளில் யாரும் தொடாத பல களங்களை தொட்டு கவனம்பெற்று வருபவர். ○ Kaviyoviyan (பேச்சு) 14:43, 3 நவம்பர் 2017 (UTC)

  1. கவியோவியத்தமிழன். [uyirvanamtrust.blogspot.com "கவியோவியத்தமிழன்"]. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kaviyoviyan&oldid=4068123" இலிருந்து மீள்விக்கப்பட்டது