Mersaleashwaran
MERSALEASHWARAN @ WIKIPEDIA 2018.
என்னுடைய கருத்துக்கள்
தொகுதமிழ் கட்டுரைகள் எழுத நிச்சயமாக அதிக நேரம் தேவைப்படுகிறது .. எனவே தயவு செய்து என்னுடைய கட்டுரையை சொடுக்கில் நீக்கும் முன் கட்டுரையின் குறைகளை "பேச்சு" பக்கத்தில் சொல்லவும் .
ஆங்கில மற்றும் பிறமொழி கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது , கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்யலாம் ஆனால் மொழிபெயர்ப்பு செய்தல் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற நினைப்பது போல , உதாரணம் : அவென்ஜ்ர்ஸ் - பழி வாங்குபவர்கள் , டைட்டானிக் - மிகவும் சக்திவாய்ந்த , இவ்வாறு மாற்றப்பட்டால் ஆங்கில மொழி தலைப்பை கொண்டு தேடப்படும் தேடல்களில் முடிவுகள் கிடைக்காமல் போகலாம். இது மோசமானது , ஆங்கில மொழி தலைப்பை பெயர்ச்சொல்லாக கருத வேண்டும் , யாரும் அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்பட பெயரை "பழி வாங்குபவர்கள் " என தேடப்போவது இல்லை. ஆங்கிலில திரைப்படங்களின் பெயர்களுக்கு மட்டும் இந்த விதிகள் பொருந்தும் . காரணம் அவைகள் பெயர்ச்சொல்ளாக இருப்பதால் தமிழில் வினைச்சொல்லாக மாற்ற மொழிபெயர்ப்பு செய்யும்போது அவசியமாகிறமேலும்து.
மேலும் இந்த பிரச்சனையை கவனிக்கவும் : கேப்டன் அமேரிக்கா - தி விண்டர் சோல்சர் என்பது கேப்டன் அமேரிககா - த வின்றற் சோல்ஐர் என்றும் நெட்பிலிக்சு என்பது நெற்ஃபிளிக்சு என்றும் மாற்றி பெயரிடப்பட்டுள்ளது. நிறைய எழுதப்பட்டாலும் கட்டுரைக்கு இவ்வாறு பெயரிடுவதால் யாருக்கும் பயனற்று போகிறது. யாரேனும் இந்த பிரச்சனையை சரி செய்யவும். நிஜமாக சொல்கிறேன் கூகுள் வலைத்தளத்தில் யாருமே "நெற்ஃபிளிக்சு" என்று தேடப்போவது இல்லை.. நீங்கள் 'தமிழ்ப்படுத்துகிறீர்கள்' ஆனால் 'மொழிபெயர்ப்பு' செய்யவில்லை. பொருந்தா தலைப்பு கொடுத்து நீங்கள் செய்யும் இந்த காரியம் எங்ஙனம் தமிழ் கட்டுரைகளை சென்றடைய வைக்கும் ? ஒரு எடுத்துக்காட்டு சொல்லப்போனால் 'விஜய்' என்ற பெயர்ச்சொல்லை 'விசய்' என்று மாற்றுவதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெயர் என்பது பெயர்தான். அதுவே அந்த கட்டுரையின் அடையாளம். இந்த பிரச்சனையை புரிந்துகொள்ளுங்கள். நல்ல கட்டுரைகளை நீக்காதீர்கள்.