Nala Venthan Arojunan Veloo
வே. ம. அருச்சுணன் V.M.Arojunan (பிறப்பு: ஆகத்து 3, 1948) மலேசியத் தமிழ் எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர், நாடக நடிகர், பாடலாசிரியர், தன்முனைப்பு பேச்சாளர் எனப் பெயர் பெற்றவர்.
வே. ம. அருச்சுணன்
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமலேசியாவின் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 1948 ஆகத்து 3 இல் பிறந்தவர். 1955 ஆம் ஆண்டு மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் கல்வியியல், மற்றும் தமிழ் ஆகியவற்றில் இளங்கலை (சிறப்பு) பட்டமும் பெற்றவர். கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார். ஷாஆலம், கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர் 2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். சிறீ செம்புர்ணா கல்வி மையம், சிறீ செம்புர்ணா பாலர் பள்ளி ஆகியவற்றை நிறுவி நடத்தி வருகிறார்.
1976 ஆம் ஆண்டு திருமதி.அஞ்சலை என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
எழுத்துத் துறை
தொகு1961 ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் ஈடுபட்டுவரும் இவர் மாணவர் நிலையிலேயே எழுதத் தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதை, கட்டுரை, கவிதை, புதினம், வானொலி நாடகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். மலேசிய வானொலி, சிங்கப்பூர் வானொலிகளுக்கு நாடகங்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
கோலாலம்பூரில் இயங்கி வரும் அஸ்வின் நிறுவனம் மூலமாக சிறுவர்களுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இப்பாடல்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. திண்ணை, பதிவுகள், வலைத்தமிழ், எழுத்து.காம், எதுவரை, வல்லமை போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பொது சேவைகள்
தொகுமிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்ததுடன், பள்ளி வாரியக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். 1982 ஆண்டு முதல் கல்வி அமைச்சுக்காகப் பள்ளிப் பாட நூல்கள் எழுதுவதில் ஈடுபட்டு வந்துள்ளார். பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சி நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இர. ந. வீரப்பன் தலைமையில் இயங்கி வந்த இலக்கியக்கழகத்தில் செயலவை உறுப்பினராகப் பல ஆண்டுகளாக இருந்து வந்ததுடன், மலேசியப் பண்பாட்டு இயக்கத்தில் செயலவை உறுப்பினராக சேவையாற்றி வருகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய செயலவை உறுப்பினராக செயல்படுகிறார்.
வெளியிட்ட நூல்கள்
தொகுசிறுகதை
தொகு- உறக்கம் கலையட்டும், புரட்சிப்பண்ணை, சேலம், சனவரி 1986
- ஒரு நிரந்தர வரம், பூவழகி பதிப்பகம், சென்னை, மார்ச்சு 1988
- முதல் வாசகி தமிழ்மணி பதிப்பகம், மலேசியா, சனவரி 1992
- தான் மட்டும், சூரியா பதிப்பகம், மலேசியா, ஆகஸ்டு 2008
கவிதை
தொகு- குழல் இனிது யாழ் இனிது, பிரியா பதிப்பகம், மலேசியா, ஆகஸ்டு 2013
புதினம்
தொகு- வேர் மறந்த தளிர்கள் 2013
குறுநாவல்
தொகு- புதிய சகாப்தம்,சங்கமணி,8.5.1973
- வானிலே ஒரு மின்னல்,தினமுரசு,3.4.1993
விருதுகள்
தொகு- 2012 மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 50ஆம் பொன் விழா ஆண்டில் "சா.ஆ.அன்பானந்தன் தங்க விருது" தந்து கௌரவிக்கப்பட்டார்.
- 2013 இல் வல்லமை இணைய இதழ் "வல்லமையாளர் விருது " தந்து கௌரவிக்கப்பட்டார்.இவ்விருது சிறந்த கவிதைக்கு தரப்பட்டதாகும்.
மேற்கோள்
தொகு- ↑ http://www.vallamai.com/?p=36614
- ↑ * http://vemaarjunan.blogspot.com/
- ↑ * http://www.sirukathaigal.com/tag/வே.ம.அருச்சுணன்
- ↑ * http://puthu.thinnai.com/?s=வே.ம.அருச்சுணன்+
- ↑ *http://www.tamilwriters.net/index.php/home (கவிஞர் காரைக்கிழார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை )