வல்லமை (மின்னிதழ்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
வல்லமை என்பது ஒரு தமிழ் இணைய இதழ் ஆகும். இவ்விதழ் முனைவர் அண்ணாகண்ணன் அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்விதழில் இலக்கியம், சமூகம், அரசியல், அறிவியல், பொதுநலம், நுண்கலைகள் ஆகிய தலைப்புகளில் நிகழ்வுகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் ஆகியன இடம் பெறுகின்றன.
வல்லமை | |
---|---|
துறை | பல்சுவை |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | பவளசங்கரி திருநாவுக்கரசு |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | வல்லமை |
வெளியீட்டு இடைவெளி: | இணைய இதழ் |
குறியிடல் | |
ISSN | இதழ் இணைய இதழ் |
இதழின் நோக்கமும் செயல்நெறிகளும்
தொகுஉலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகியவை, வல்லமை இணைய இதழின் முதன்மை நோக்கங்கள்.
நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல் பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை உள்ளிட்டவை இவ்விதழின் செயல்நெறிகள்.
வல்லமையாளர் விருது
தொகுஇளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வல்லமை ஆசிரியர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பாளிகளுக்கு வாரம் தோறும் "வல்லமையாளர் விருது" வழங்கி கௌரவித்து வருகிறது. ஐக்கியா நிறுவனத்துடன் இணைந்து விருது பெற்ற படைப்பாளிகளுக்குப் பரிசுகளையும் வழங்கி வருகிறது.