Nikandan Thevar
இந்திய | |
---|---|
பெயர் | நிகண்டன் தேவர் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | அக்டோபர் 10, 1989 |
தற்போதைய வசிப்பிடம் | நவி மும்பை |
தேசியம் | இந்திய தமிழ் |
இனம் | தமிழர் |
கல்வி, தொழில் | |
தொழில் | பொறியாளர் |
கல்வி | பொறியியலில் பட்டப்படிப்பு |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | தகவல் தொழில், சாகச, புகைப்படம் எடுத்தல், இயற்கை காதலன், நண்பர்களுடன் பயணம், வன. வாழ்க்கையினை ரசித்தல் |
நூல்கள் | தகவல் தொழில்நுட்பம் |
ஆர்வம் | துணிகரச் செயல்கள் |
விக்கி விபரம் | |
இணைந்தது | 10 ஜூலை 2015 |
முதல் தொகுப்பு | அலோபேசியா_அரேடா |
About me
தொகுஎனது பெயர் நிகண்டன், எனது வாழ்க்கை முறையினையும் குல வழக்கங்களையும் எடுத்துரைக்கும்பொருட்டு தேவர் எனும் குலத்தின் பெயரினையும் எனது பெயருடன் இணைத்துள்ளேன். நான் பிறந்த இடம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை என்பதால்தான் என்னவோ, தமிழின் மீது ஒருவித பாசமும், நேசமும் கலந்துள்ளது. ஆனால், தற்போது நான் மும்பை மாநிலத்தில் வசித்து வருகிறேன். என்னால் தொடர்ந்து தமிழில் பலதரப்பட்ட தலைப்புகளின் கீழ் சிறந்த கட்டுரைகளை வழங்க இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், எனக்கு கிடைக்கும் நேரம்தனில் சில தமிழ் கட்டுரைகளையேனும் என்னால் வழங்க இயலும். அதற்காக நான் தேர்வு செய்த இடம்தான் ‘இணையம்’. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், ‘விக்கிபீடியா’. நமக்கு தெரிந்த விஷயங்களை இணையத்தின் வாயிலாக அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்பது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியும். அதிலும் அனைத்திற்கும் தலைவனாக விளங்கும் விக்கிபீடியா அளிக்கும் சேவையில் நாமும் ஒரு பங்கெடுத்தால் என்ன? என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த சிறிய புதிய முயற்சி.
என்னால் இயன்ற அளவு தமிழ் கட்டுரைகளை விக்கிபீடியாவிற்கு அளிப்பதே அந்த முயற்சி. புதிதாக சில கட்டுரைகளை அளிப்பது சற்று சிரமமான விஷயம்தான் என்றாலும், அதற்கான வேலையிலும் முனைந்துள்ளேன். பொறியியலாளாராக உலகம் முன் நான் வலம் வந்தாலும் என்னுள் இருக்கும் தமிழனை என்னால் கண்டிப்பாக மறக்க இயலாது. அதற்குச் சான்றாகத்தான் இப்படி தமிழ் கட்டுரைகளை எழுத தொடங்கினேன். துணிவுமிக்க பயணங்கள், புகைப்படம் எடுத்தல், இயற்கை விரும்பி, நண்பர்களுடன் செல்லும் பயணங்கள் மற்றும் காட்டு வாழ்க்கை என அன்றாட வாழ்க்கை எனக்குத் தரும் புதுப்புது அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகளாக வடிக்கும் எண்ணம் என்னுள் இருக்கிறது. ஆனால் வேலைப்பளு மற்றும் சில காரணங்களால் அதிகப்படியான புதிய கட்டுரைகளை அளிக்க முடியவில்லை. இருப்பினும், ஏற்கனவே விக்கிபீடியாவில் இருக்கும் ஆங்கில அல்லது பிற மொழிக்கட்டுரைகளை என்னால் அதிக சிரமம் இல்லாமல் மொழிபெயர்க்க இயலும்.
எனது வயது 26 என்பதால், இப்போது நான் செய்யத் தொடங்கும் ஒவ்வொரு நற்காரியங்களும் எனது பண்பினை மென்மேலும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கையில்தான் இந்த பணிகளைச் செய்கிறேன். சில வேளைகளில் என்னால் இதனைச் செவ்வனே செய்யமுடியாவிடில் உங்களின் உதவி தேவைப்படலாம். சில கட்டுரைகளில், எழுத்துப்பிழைகள் இருக்கலாம், அதை தாங்கள் அறிந்தால் எனக்குத் தெரியப்படுத்தினால் மட்டும் போதும். ஏனெனில் நானும் சாதாரண மனிதன்தான், அனைத்தும் அறிந்த அதிபுத்திசாலி அல்லது ஞானி அல்ல. பல்வேறு காரணிகளால் நான் மேற்கொள்ளும் இக்காரியங்களில் பிழை வந்தால் மன்னித்து ஏற்கவும். உங்களால் முடிந்தால் நீங்களும் தமிழில் கட்டுரைகளை இணையத்தில் அளியுங்கள். நற்கருத்துக்களைத் தேடி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இணையத்தில் வலம்வருகின்றனர். அவர்களுக்கு இவை உதவும்.