Pon Nithiyanantham
பொன் நித்தியானந்தம் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 4, 1948 பொன்னாவெளி, இலங்கை |
பட்டம் | பொது கலைமானிப்பட்டம் இலங்கை பல்கலைக்கழகம் |
விருதுகள் | சாம ஸ்ரீ தேஷமானிய சமூக ஜோதி, கரை எழில் விருது |
பொன் நித்தியானந்தம் (Pon Nithiyanantham) கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் 1972 இல் வட்டக்கச்சி யில் கிராம் சேவையாளராக 5 வருடங்கள் கடமை புரிந்தார். சமூக சேவை உத்தியோகத்தராக 10 வருடங்கள் கிளிநொச்சியில் கடமை புரிந்தார். பின் கிளிநொச்சியில் திட்டப்பணிப்பாளராக 3 வருடங்களும் உதவி அரசாங்க அதிபராக கரைச்சியில் 5 வருடங்களும் 10 வருடங்களாக விசேட ஆணையாளராகவும் கடமை புரிந்தார். இவர் சிறந்த சமூக சேவையாளராக விளங்கினார். அந்த வகையில் KDRRO நிறுவனத்தின் பொருளாளராகவும் கடமை புரிந்தார். மற்றும் மகாதேவ ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தின் தோற்றத்திலும் வன்னேரி முதியோர் இல்லத்தின் உருவாக்கத்திலும், கிளி. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.
விருதுகள்
தொகுஇவருடைய சமூகப்பணிகள் காரணமாக "கரைஎழில்" விருது கரைச்சிப்பிரதேச சபையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருடைய சமூக சேவை செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் "சாமசிறீ தேசமான்ய சமூகஜோதி" விருது வழங்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை பண்பாட்டு பெருவிழாவில் சிறந்த உள்ளுராட்சி சேவையாளர் "நாவை குகராஜா ஞாபகார்த்த விருது 2022இல் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ N, ஓங்காரன் (2016). கரைச்சி. சைவம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789554274600.
- ↑ யார் எவர் -கிளிநொச்சி (2ம் பதிப்பு ed.). 2024. p. 74.
- ↑ அமுதவாசன் (2020). ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வரலாறு. திரு.ஆ.சி.ப.அமுதவாசன். p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786249646506.