இணைய இணைப்பைப் பகிர்தல்
இணைய இணைப்பைப் பகிர்தலானது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) வின்டோஸ் சேவர் 2003 வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது.[1] இதுபோன்றே வின்டோஸ் எக்ஸ்பி 64பிட் [2] பதிப்பும் சொதனையில் இருக்கும் வி்ன்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 [3] வழங்கியாகச் செயல்படுவதில் சில பிரச்சினைகள் அவதானிக்கப்பட்டுள்ள பொழுதிலும் தொடர்ந்தும் இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படும். இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.
குறிப்பு:இரண்டு கணினிகள் மாத்திரமே இருந்தால் இரண்டு கணினியையும் குறஸோவர் (Cross-over) கேபிள் மூலம் இணைத்துவிடலாம் இதற்கு சுவிச் அவசியம் இல்லை.
ஆதாரங்கள்
தொகு- ↑ வலையமைப்புப் பாலம் பரணிடப்பட்டது 2008-04-14 at the வந்தவழி இயந்திரம் மைக்ரோசாப்ட் ரெக்நெட் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007
- ↑ இணைய இணைப்பைப் பகிர்தல் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007
- ↑ இணைய இணைப்பகிரும் வழங்கியாக விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 இயங்கவில்லையா? பரணிடப்பட்டது 2008-01-01 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது டிசம்பர் 27, 2007