பயனர்:Selvasivagurunathan m/குறிப்பேடு
எனது 'குறிப்பேடு'
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குத் தேவைப்படுபவை
தொகு- எழுத முனைபவர்களை தக்கவைக்க வேண்டும். முரண்கள் ஏற்படும் இடங்களில், சுமூக நிலை ஏற்பட முயற்சி செய்யவேண்டும். இதைச் செய்யத் தவறியதால், ஆர்வமுடன் பங்களிக்கும் பலர் இழக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்வத்துடன் பங்களிப்பவர்கள் செய்யும் பிழைகளைத் திருத்தி, அவர்களுக்கு வழிகாட்டி உதவ வேண்டும்.
- ஆர்வத்துடன் பங்களிப்பவர்கள் உரையாடல் பக்கங்களில் ஐயங்கள், உதவிகள் கேட்கும்போது அவர்களுக்கு உதவ வேண்டும். பதில்கள் கிடைக்கவில்லையெனில், அவர்கள் விலகிப் போய்விடுவர்.
- ஐ.பி. முகவரிகளில் செய்யப்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து, அந்த மாற்றங்கள் சரியானவைதானா என்பதனை பார்க்க வேண்டும்.
காரணங்கள்:
- தொடர்பங்களிப்பாளர்கள் குறைவாக உள்ளனர். எனவே, போதிய ஆள்பலம் இல்லை.
- தொடர்பங்களிப்பாளர்கள் கட்டுரையாக்கங்களிலும், முன்னேற்றப் பணிகளிலும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர்.
- கட்டுரைகளின் முன்னேற்றத்திற்கான பல்வேறு பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக புதிய பயனர்கள், ஐ.பி. முகவரியில் எழுதும் பயனர்கள் கடந்து செல்லப்படுகின்றனர்.
ஒரு தீர்வு: Diplomat போன்று செயல்படத்தக்க ஒருவர் தன்னை தன்னார்வமாக நியமித்து கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் முழு நேர ஊழியர் போன்று அவர் நியமிக்கப்படலாம்.
செயல்பாடுகளுக்கான பரிந்துரைகள்
தொகு- ஊதியம் பெறும் முழுநேர ஒருங்கிணைப்பாளராக ஒருவரை பணியில் அமர்த்துதல்.
- அவருக்கு உதவும் வகையில் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருவர் தன்னார்வத்தில் செயல்படுதல்.
பயிலரங்கம்/பயிற்சிப் பட்டறை
தொகு- ஒவ்வொரு நிகழ்விலும் 30 பேர் பங்குகொள்ளும் வகையில் 3 நிகழ்வுகள்.
- மொத்தமாக 90 பயனர்கள் பயிற்சி பெறுவர். அவர்களில், 75 பயனர்கள் ஒவ்வொருவரும் 10 கட்டுரைகளை எழுதுவதன் வழியாக 750 கட்டுரைகளைப் பெறுதல்.
- முதலாவது ஆண்டின் இறுதியில் குறைந்தது 9 பயனர்களை தொடர்பங்களிப்பாளர்களாக செயல்பட வைப்பதை இலக்காகக் கொள்ளுதல்.
- திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருவர் செயல்பட வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கான உள்ளகப்பயிற்சி
தொகு- ஒவ்வொரு திட்டத்திலும் 25 பேர் பங்குகொள்ளும் வகையில் 2 திட்டங்கள்
- மொத்தமாக 50 மாணவர்கள் பயிற்சி பெறுவர். ஒவ்வொருவரும் 5 கட்டுரைகளை எழுதுவதன் வழியாக 250 கட்டுரைகளைப் பெறுதல்.
- முதலாவது ஆண்டின் இறுதியில் குறைந்தது 5 மாணவர்களை தொடர்பங்களிப்பாளர்களாக செயல்பட வைப்பதை இலக்காகக் கொள்ளுதல்.
- திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருவர் செயல்பட வேண்டும்.