விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சித் திட்டம் (Tamil Wiki Internship Programme) என்பது தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும்.

நோக்கம்

தொகு
  1. மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை வளர்த்துக் கொள்ள உதவுதல்.
  2. தமிழ் விக்கிமீடிய திட்டங்களில் பங்களிப்பதற்கான பயனர்களை உருவாக்குதல்.

வடிவமைப்பு

தொகு
  • கல்லூரிகளின் அழைப்பின்பேரில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
  • கல்லூரியுடன் இணைவாக்க முறையில் திட்டம் நடத்தப்படும்.
  • மாணவர்களுக்கு நேரடியாகப் பங்குகொள்ளும் பயிற்சிப் பட்டறை, இணையம் வழி ஆகியவற்றின் மூலமாக பயிற்சிகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
  • பயிற்சி வழங்கப்படும் திட்டங்கள்: விக்கிப்பீடியா, பொதுவகம், விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு
  • மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிமீடியாவால் வழங்கப்படும்.

விதிமுறைகள்

தொகு
  • பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளுதல் அனைவருக்கும் அவசியம் ஆகும்.
  • இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலவில்லை எனில், நண்பர்கள் மூலமாகவோ தானாகவோ கற்று இலக்குகளை அடையலாம்.
  • இலக்குகள்:
    • விக்கிப்பீடியா - குறைந்தது ஐம்பது பக்கங்களை தொகுத்தல். விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுதுதல்.
    • பொதுவகம் - குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றுதல்.
    • விக்சனரி - குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்குதல். இருபது சொற்களை மேம்படுத்துதல்.
    • விக்கிமூலம் - குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்த்தல்.
    • விக்கித் தரவு - குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
  • நிர்ணயிக்கப்படும் நாட்களுக்குள் இலக்குகளை அடைபவர்களுக்கு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால் இலக்கினை அடைய இயலவில்லை எனில், கூடுதலான நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கலாம். இலக்கினை எட்டிய பிறகு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதுவரை நடந்துள்ள நிகழ்வுகள்

தொகு
  1. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020
  2. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021